Categories
உலக செய்திகள்

குறைந்த விலையில் கச்சா எண்ணெய் வாங்க முடிவு…. ரஷ்யாவிற்கு செல்லும் இலங்கை மந்திரிகள்…!!!

இலங்கை நாட்டின் மந்திரிகள் இருவர் குறைந்த விலையில் கச்சா எண்ணெய் வாங்குவதற்காக ரஷ்ய நாட்டிற்கு செல்ல இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கியிருப்பதால் அங்கு எரிபொருள் பற்றாக்குறை அதிகரித்துள்ளது. எனவே, இதனை சமாளிப்பதற்காக கத்தார், ரஷ்யா போன்ற நாடுகளிடம் குறைந்த விலையில் கச்சா எண்ணெய் வாங்க இலங்கை முயன்று கொண்டிருக்கிறது. அதன்படி ரஷ்ய நாட்டிடம் பேச்சுவார்த்தை நடத்தி கச்சா எண்ணெய்யை வாங்குவதற்காக இலங்கை நாட்டின் இரண்டு மந்திரிகள் இன்று அங்கு செல்கிறார்கள்.

இது குறித்து இலங்கையின் எரிசக்தி துறையின் மந்திரியான காஞ்சன விஜேசேகரா தெரிவித்ததாவது, தற்போது இருப்பில் இருக்கும் எரிபொருளை 2 நாட்களுக்கு மட்டுமே பயன்படுத்த முடியும். அது அத்தியாவசியமான தேவைகளுக்காக ஒதுக்கப்பட்டிருக்கிறது.

இந்த நிலை ஏற்பட்டதற்காக தேசத்திடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம். குறைந்த விலையில் கச்சா எண்ணெய் வாங்குவதற்காக மந்திரிகள் இருவர் ரஷ்ய நாட்டிற்கு செல்கிறார்கள் என்று கூறியிருக்கிறார்.

Categories

Tech |