Categories
உலக செய்திகள்

அமெரிக்காவில் திரண்ட இலங்கை மக்கள்…. கோட்டபாய ராஜபக்சே மகன் வீட்டின் முன் ஆர்ப்பாட்டம்…!!!

அமெரிக்க நாட்டில் இருக்கும் அதிபர் கோட்டபாய ராஜபக்சேவின் மகனான மனோஜ் ராஜபக்சேவின் வீட்டின் முன் இலங்கை மக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர்.

இலங்கையில் நிதி நெருக்கடி ஏற்பட்டு, மக்கள் பல இன்னல்களை சந்தித்து வருகிறார்கள். எனவே, அரசாங்கத்திற்கு எதிரான மக்களின் போராட்டம் உச்சகட்டத்தை அடைந்தது.  அந்நாட்டு அதிபர் ராஜபக்சேவின் மாளிகைக்குள் ஆர்ப்பாட்டக்காரர்கள் அதிரடியாக நுழைந்தனர்.

அதற்கு முன்பாகவே அதிபர் கோட்டபாய ராஜபக்சே தன் குடும்பத்தினருடன் அங்கிருந்து தப்பிவிட்டார். புதிய அதிபரை நியமிக்க பணிகள் நடக்கின்றன. இந்நிலையில் அமெரிக்க நாட்டின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரத்தில் இருக்கும் முன்னாள் அதிபரான கோட்டபாய ராஜபக்சேவினுடைய மகனான மனோஜ் ராஜபக்சேவின் குடியிருப்பின் முன் இலங்கை மக்கள் குவிந்தார்கள்.

சிங்கப்பூருக்கு தப்பிய கோட்டபாய ராஜபக்சே மீண்டும் நாட்டிற்கு திரும்ப வேண்டும் என்று அவர்கள் முழக்கங்கள் எழுப்பினர். மேலும் ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்ததாவது, கோட்டபாய ராஜபக்சே, அதிபர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். அவர், இலங்கை மக்களின் பணத்தை வைத்திருக்கிறார்.

அதனை திருப்பித் தர வேண்டும். நாங்கள் லாஸ் ஏஞ்சல்ஸ் பகுதியில், முன்னாள் அதிபர் கோட்டபாய ராஜபக்சேவின் மகன் குடியிருப்பின் முன் உள்ளோம். இலங்கை மக்களிடமிருந்து கொள்ளையடிக்கப்பட்ட பணம் அவரிடம் இருக்கிறது. அதன் மூலம் தான் ஆடம்பர சொத்துக்களை வைத்திருக்கிறார்கள்.

அது எங்களின் பணம், எங்கள் சொத்து என்று தெரிவித்தனர். மேலும், தன் சொத்துக்கள் குறித்த விவரங்களை மனோஜ் ராஜபக்சே தெரிவிக்க வேண்டும். அப்படி இல்லை எனில் அவரை எதிர்த்து சட்டபூர்வ நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று எச்சரித்திருக்கிறார்கள்.

Categories

Tech |