இலங்கையில் நிதி நெருக்கடி ஏற்பட்டிருப்பதால் அந்நாட்திலிருந்து சிலர் பைபர் படகில் தமிழ்நாட்டிற்கு வந்தடைந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் நிதி நெருக்கடி அதிகரித்ததால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். எனவே, சில குடும்பங்கள் அந்நாட்டிலிருந்து வெளியேறி, அகதிகளாக தமிழ்நாட்டில் தஞ்சமடைந்து கொண்டிருக்கிறார்கள்.
கிளிநொச்சியில் வசிக்கும் சந்திரகுமார், அவரின் மனைவி மற்றும் கைக்குழந்தை ஆகியோரும் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கிருபாகரன் என்ற நபர், அவரின் மனைவி மற்றும் குழந்தைகள் என்று மொத்தமாக 8 நபர்கள் தலைமன்னாரிலிருந்து பைபர் படகு வழியாக நேற்று முன்தினம் தமிழ்நாட்டிற்கு வந்திருக்கிறார்கள்.
இது குறித்து தகவல் அறிந்த கடலோர காவல் படையினர், அவர்களை மீட்டு விசாரணை மேற்கொண்டனர். அதன் பிறகு, அவர்களை அகதிகள் முகாமில் தங்க வைத்திருக்கிறார்கள். இந்நிலையில், இதே போன்று மூன்று குடும்பங்கள் கைக்குழந்தையுடன் இன்று தமிழ்நாட்டிற்கு வந்திருக்கிறார்கள். அவர்களும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருக்கிறார்கள்.