இலங்கையில் நிதி நெருக்கடியை கையாள அதிபர் அணில் விக்ரமசிங்கே அனைத்து கட்சியை சேர்ந்த அமைச்சரவையை விரிவாக்கம் செய்யவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை கடும் நிதி நெருக்கடியில் சிக்கியிருப்பதால், மக்கள் ஒவ்வொரு நாளும் பல இன்னல்களை சந்தித்துக் கொண்டிருக்கிறார்கள். எனவே, அரசங்கதிற்கு எதிரான அவர்களின் போராட்டம் தீவிரமடைந்து வருகிறது.
இந்நிலையில், புதிய அதிபராக பொறுப்பேற்று இருக்கும் ரணில் விக்ரமசிங்கே, நிதி நெருக்கடியை கையாள அனைத்து கட்சியை சேர்ந்த உறுப்பினர்களும் இடம்பெறும் விதமாக அமைச்சரவையை விரிவாக்கம் செய்வதற்கு தீர்மானித்திருக்கிறார்.
புதிதாக பொறுப்பேற்ற அமைச்சரவையில், நாட்டின் பொதுஜன பெரமுன கட்சியை தவிர பிற கட்சிகளில் இருவர் மட்டும் அமைச்சர்களாக இருக்கிறார்கள். மேலும் 12 நபர்கள் அமைச்சரவையில் இணைக்கப்படுவார்கள் என்று கூறப்பட்டிருக்கிறது.