Categories
Uncategorized உலக செய்திகள்

இலங்கைக்கு உரம் அனுப்ப பிரதமர் மோடி அனுமதி…. அதிபர் கோட்டாபாய ராஜபக்ஷே அறிவிப்பு…!!!

இலங்கைக்கு உரம் அளிக்க, பிரதமர் நரேந்திர மோடி ஒப்புதல் அளித்திருப்பதாக அதிபர் கோட்டபாய ராஜபக்சே கூறியுள்ளார்.

இலங்கை கடும் நிதி நெருக்கடியில் சிக்கியிருப்பதால் அங்கு விவசாயம் அதிகமாக பாதிப்படைந்துள்ளது. அந்நாட்டு அரசாங்கம் கடந்த வருடம் வேதி உரங்களை இறக்குமதி செய்வதற்கு தடை அறிவித்ததால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது. அந்நாட்டில் தேயிலை, நெல் போன்ற பயிர்களின் விளைச்சல் 50% சரிவடைந்திருக்கிறது.

எனவே, அங்கு கடும் உணவுப் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. இதனால் விளைச்சலைப் பெருக்க அரசாங்கம் தீர்மானித்திருக்கிறது. இதற்காக இந்தியாவிடம் உரம் வழங்குமாறு கோரியுள்ளது. இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி இதற்கு ஒப்புதல் அளித்திருக்கிறார். அதிபர் ராஜபக்ஷே இதனை உறுதி செய்திருக்கிறார். இந்தியாவிலிருந்து அனுப்பப்படும் உரம், கொழும்பு நகருக்கு சென்றவுடன் நாடு முழுக்க 20 தினங்களுக்குள் விநியோகம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |