இலங்கையில் அதிபருக்குரிய அதிகாரங்களை திரும்பப் பெறும் அரசியல் சாசன திருத்தத்தின் மசோதாவிற்கு மந்திரிசபை கூட்டத்தில் இன்று அனுமதி வழங்கப்படுகிறது.
இலங்கையில் அதிபர் கோட்டாபய ராஜபக்ஷே பதவியேற்றவுடன், நாடாளுமன்றத்திற்கு வழங்கப்பட்டிருந்த அதிக அதிகாரங்களை பறித்து அதிபருக்கு அதிக அதிகாரங்கள் வழங்க கூடிய வகையில் மசோதா-20 ஏ கொண்டு வரப்பட்டது. இந்நிலையில், தற்போது இலங்கை கடும் நிதி நெருக்கடியில் சிக்கி இருப்பதால் அதிபரின் அதிகாரங்கள் பறிக்கப்பட வேண்டும் என்று போராட்டங்கள் நடக்கிறது.
எனவே, அதிபரின் அதிகாரங்களை திரும்ப பெறக்கூடிய வகையில், 21-ஆம் அரசியல் சாசன திருத்த வரைவு மசோதா கொண்டு வரப்பட்டிருக்கிறது. இன்று மந்திரிசபை கூட்டத்தில் அந்த மசோதாவிற்கு அனுமதி வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.