Categories
உலக செய்திகள்

ஆஸ்திரேலிய மக்கள் தொடர் போராட்டம்…. இலங்கை தமிழருக்கு குடியேற்ற அனுமதி வழங்கிய அரசு…!!!

ஆஸ்திரேலிய நாட்டு மக்கள் போராட்டத்தால், இலங்கையைச் சேர்ந்த தமிழ் குடும்பத்திற்கு குடியேற்ற அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது.

இலங்கை தமிழர்களான நடேஷ் முருகப்பர், பிரியா நடராஜா ஆகிய இருவரும் கடந்த 2012ம் வருடத்தில் ஆஸ்திரேலியா நாட்டிற்கு சென்றிருக்கிறார்கள். அங்கு, குடியேற்ற உரிமைக்காக அரசாங்கத்திடம் விண்ணப்பித்துள்ளனர். எனவே, தற்காலிக பாதுகாப்பு அவர்களுக்கு அளிக்கப்பட்டது. இருவரும் காதல் திருமணம் செய்த நிலையில், அவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் இருக்கிறார்கள்.

இந்நிலையில், ஆஸ்திரேலியாவில் இவர்களது குடியேற்ற விண்ணப்பங்கள் பல வருடங்களாக பரிசீலனை செய்யப்பட்டு இறுதியில் நிராகரிக்கப்பட்டது. மேலும், கடந்த 2018-ஆம் வருடத்தில் அவர்களின் தற்காலிக கடவுசீட்டு காலாவதியானது. எனவே, அவர்களை நாட்டிலிருந்து வெளியேற்றுவதற்கு முயற்சி மேற்கொள்ளப்பட்டது.

இவர்கள் வசிக்கும் பில்லாயிலா என்னும் நகரத்தை சேர்ந்த மக்கள், அவர்களை நாட்டிலிருந்து வெளியேற்ற கூடாது என்று ஆர்ப்பாட்டம் நடத்த தொடங்கினார்கள். இந்நிலையில், அந்நாட்டின் புதிய பிரதமரான அந்தோணி அவர்களுக்கு விசா வழங்கியிருக்கிறார். தற்காலிகமாக அவர்கள் அந்நகரத்தில் வசித்து கொள்ளவும் பணியாற்றவும் அரசு அனுமதி வழங்கியிருக்கிறது.

Categories

Tech |