வரும் 26ம் தேதி முதல் எதிர்க் கட்சித் தலைமையில் இலங்கை அரசுக்கு எதிராக பேரணி நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இலங்கையில் கடும் நிதி நெருக்கடி ஏற்பட்டு உணவு, பெட்ரோல், டீசல் போன்றவற்றின் விலை வெகுவாக அதிகரித்திருக்கிறது. மேலும் ஒவ்வொரு நாளும் பல மணி நேரங்கள் மின்வெட்டு ஏற்படுகிறது. இதனால் மக்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர். எனவே தலைநகர் கொழும்புவில் மக்கள் அதிபர், பிரதமர் மற்றும் பிரதமர் தலைமையிலான அமைச்சரவையில் பதவி விலக கோரி தொடர்ந்து 15 வது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் எதிர்க் கட்சி சார்பில் வரும் 26ம் தேதி கண்டியில் இருந்து கொழும்பு வரை ஒரு வாரத்திற்கு பேரணி நடைபெற உள்ளது. இதனைத் தொடர்ந்து பொருளாதார நெருக்கடியை சீர் செய்யும் முயற்சியில் பல்வேறு நடவடிக்கைகளை இலங்கை அரசு எடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.