Categories
காஞ்சிபுரம் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

ஸ்ரீபெரும்புதூர் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.வின் மனைவி, மகளுக்கு கொரோனா தொற்று உறுதி..!!

ஸ்ரீபெரும்புதூர் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.வின் மனைவிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அ.தி.மு.க. எம்.எல்.ஏ. பழனி ஏற்கனவே கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். தற்போது எம்.எல்.ஏ.வின் மனைவி மற்றும் மகளுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் தொகுதி அதிமுக எம்எல்ஏ பழனிக்கு கடந்த 13ம் தேதி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. தமிழ்நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 2வது எம்எல்ஏ இவர் ஆகும்.

இதையடுத்து அவர் சென்னை போரூரில் உள்ள MIOT மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். மேலும், எம்எல்ஏவின் உடல்நலம் குறித்து முதல்வர் பழனிசாமி தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு நலம் விசாரித்தார். இந்த நிலையில் எம்.எல்.ஏ.வின் மனைவி, மகன், மருமகள், மகள், மருமகன் உள்பட 30 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யபட்டுள்ளது.

மேலும் அவர்களை வீட்டில் தனிமைப்படுத்தி வைக்கபட்டுள்ளனர். மதனந்தபுரம் பகுதியில் சுகாதார பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன. இந்த நிலையில் அவரது மனைவி, மகள் என இருவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்கள் இருவரும் சென்னை மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Categories

Tech |