Categories
அரசியல் மாநில செய்திகள்

ஸ்ரீபெரும்புதூர் தொகுதி அதிமுக எம்எல்ஏ கொரோனவால் பாதிப்பு…!!

ஸ்ரீபெரும்புதூர் தொகுதி அதிமுக எம்எல்ஏ பழனிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனவால் பாதிக்கப்பட்ட பழனி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தமிழ்நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 2வது எம்எல்ஏ இவர் ஆகும்.

தமிழகத்தில் சென்னையை தொடர்ந்து செங்கல்பட்டு, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்கள் மிகவும் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் இதுவரை 7,000திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதில் நேற்று அதிமுக கட்சியை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் பழனிக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

அதில் அவருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதாயடுத்துஇதையடுத்து அவர் சென்னை போரூரில் உள்ள MIOT மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். காஞ்சிபுரம் மாவட்டம் முழுவதும் நேற்று வரை 650 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 386 பேர் குணமடைந்துள்ளனர். 258 பேர் சிகிச்சையில் உள்ளனர். இதுவரை 6 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர். இன்று மேலும் 25 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக பாதிப்பு 675 ஆக அதிகரித்துள்ளது.

Categories

Tech |