Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

அரிசி குடோனில் இதுவா இருக்கு…? வசமா சிக்கிய வாலிபர்…. காவல்துறையினரின் நடவடிக்கை….!!

அரிசி மில் குடோன்களில் புகையிலை பதுக்கி வைத்திருந்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்தனர்.

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள மாம்பழப்பட்டு ரோட்டில் உள்ள ஒரு அரிசி மில் குடோனில் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயசங்கர் தலைமையில், காவல்துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்திருந்தது காவல்துறையினருக்கு தெரியவந்தது.

இதனையடுத்து காவல்துறையினர் 1 லட்சத்து 40 ஆயிரம் மதிப்புள்ள அந்த புகையிலை பொருட்கள் மற்றும் மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்ததோடு, மருதூர் பகுதியைச் சேர்ந்த முகமது அசாருதீன் என்பவரை கைது செய்தனர். மேலும் இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த இளங்கோவன் என்பவரை வலைவீசி தேடி வருகின்றனர்.

Categories

Tech |