Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

இதை செய்யாதிங்க…. எஸ்.டி.பி.ஐ. – யின் போராட்டம்…. அரசுக்கு விடுக்கப்பட்ட கோரிக்கை….!!

சட்டப்படி மனித உரிமைகளுக்காக போராடியவர்களை கடுமையான சட்டத்தின் கீழ் கைது செய்வதை மத்திய அரசு தவிர்க்க வேண்டுமென எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் போராட்டம் நடத்தினர்.

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பாளையங்கோட்டை பகுதியில் எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் மாவட்ட தலைவர் எஸ்.எஸ். அப்துல் கரீம், மாவட்ட துணைத்தலைவர் சாகுல் அமீது உஸ்மானி, மாவட்ட செயலாளர் முஸ்தபா ஆகியோர் முன்னிலையில் போராட்டம் நடைபெற்றது. இதனையடுத்து மாநகர மாவட்ட செயலாளர் அலாவுதீன் தலைமையில் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசிடம் எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் சட்டப்படி மனித உரிமைகளுக்காக போராடிய நபர்கள் மீது கடுமையான சட்டத்தின் கீழ் கைது செய்வதை தவிர்க்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதனைதொடர்ந்து ஸ்டேன் சாமி என்பவர் ஜார்க்கண்ட் மாநில பழங்குடியின மக்களின் உரிமைக்காக போராடியதற்காக உபா சட்டத்தின் கீழ் மத்திய அரசு அவரை கைது செய்து சிறையில் அடைத்தது. இதனால் சிறையில் வைத்து ஸ்டேன் சாமி இறந்து விட்டார். அவர் இறப்பிற்கு காரணமானவர் மீது சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தி போராட்டங்கள் நடத்தப்பட்டது. இந்த போராட்டத்தில் பலர் கலந்து கொண்டனர்.

Categories

Tech |