Categories
உலக செய்திகள்

பிரசவிக்கும்போது சரமாரியாக சுட்ட கொடூரர்கள்… தாய், சேய் பரிதாபமாக பலியான சோகம்..!!

பிரசவத்தின்போது மர்ம நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியதால் தாயும் சேயும்  உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது

தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த மூன்று குழந்தைகளுக்கு தாயான ஷைதா நாதன் என்ற பெண்ணொருவர் தனது வீட்டில் இருக்கும் செட்டில் தனது நாலாவது குழந்தையை பிரசவிக்க காத்திருந்தார். அவருக்கு குழந்தை பிறக்கும் நேரம் திடீரென வந்த மர்ம நபர்கள் செட்டை குறிவைத்து துப்பாக்கிச் சூடு மேற்கொண்டுள்ளனர். இதில் ஷைதாவும் அவரது குழந்தையும் பரிதாபமாக உயிரிழந்தது.

மருத்துவ குழு அழைக்கப்பட்டும் அவர்களால் துப்பாக்கி சூட்டில் காயம் ஏற்பட்ட தாயையும் குழந்தையையும் காப்பாற்ற இயலவில்லை. மர்ம நபர்கள் அந்தப் பெண்ணின் மூத்த மகன்கள் இருவரை கொலை செய்ய துப்பாக்கி சூடு நடத்தியதில் ஷைதா குழந்தை இறந்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். 2 மூத்த மகன்களும் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் அவர்களது உடல்நிலை குறித்த தகவல்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை.

Categories

Tech |