அமெரிக்காவில் இளம்பெண் ஒருவர் நீச்சல் குளத்திற்குள் 8 மாத குழந்தையை தூக்கி வீசும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
வெளியான அந்த வீடியோவில் நீச்சல் பயிற்சியாளர் 8 மாத குழந்தையை தண்ணீருக்குள் எறிகிறார். அருகிலிருந்தவர்கள் பதற்றமின்றி உற்சாக குரல் எழுப்புகின்றனர். குழந்தை தண்ணீருக்குள் மூழ்கியதும் பயிற்சியாளர் தண்ணீருக்குள் இறங்குகிறார். ஆனால் அவர் குழந்தையை தூக்காமல் நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கின்றார். சில வினாடிகளுக்குப் பிறகு குழந்தை தானாக தண்ணீர் பரப்புக்கு மேல் வருகின்றது. தத்தான் பித்தான் என கை கால்களை அடித்துக் கொண்டு வர அதன் பிறகு குழந்தையை வாரி அணைத்து கொள்கிறார் அந்தப் பெண்.
இது என்ன முட்டாள்தனமான வீடியோ என நினைத்தால் அதை பதிவு செய்தவர் குழந்தையின் தாய் ஆலிவர் எனும் பெயர்கொண்ட அந்த குழந்தையின் தாயான கிரிஸ்டா பிற்காலத்தில் தண்ணீருக்குள் குழந்தை விழுந்து விட்டால் தப்பித்துக் கொள்வதற்காக நீச்சல் குளத்தில் பயிற்சியாளர்களை வைத்து பயிற்சி கொடுப்பதாக கூறுகிறார். இந்த காணொளி 75 மில்லியன் முறை பார்க்கப்பட்ட நிலையில் கடுமையான விமர்சனங்களுக்கு ஆளாகி உள்ளார் குழந்தையின் தாய் அவரை பலரும் திட்டித்தீர்த்துள்ளனர். அதோடு கொலை மிரட்டல்களும் வந்துள்ளது. இந்த செய்கையினால் பிற்காலத்தில் குழந்தை மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகலாம் என சிலர் எச்சரித்துள்ளனர்.