பிரிட்டனை சேர்ந்தவர்கள் சில நாடுகளுக்கு செல்ல அனுமதிக்கப்படுவார்கள் என அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது
கொரோனா அச்சமில்லாமல் பிரிட்டனை சேர்ந்தவர்கள் ஸ்பெயின், பிரான்ஸ் மற்றும் இத்தாலி போன்ற நாடுகளுக்கு அடுத்த வாரத்திலிருந்து சென்று வரலாம் என வெளிவிவகார அமைச்சகம் தெரிவித்துள்ளது. பிரிட்டனில் கடைபிடிக்கும் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு நிகராக மேற்கொள்ளும் நாடுகளிடையே இந்த விவகாரத்தில் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டதாக போக்குவரத்து அமைச்சர் கிராண்ட் ஷாப் தெரிவித்துள்ளார்.
ஜூன் 29 அன்று ஊரடங்கு தொடர்பாக முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் அதே கூட்டத்தில் பாதுகாப்பு நிறைந்த பயணத்திட்டம் குறித்தும் சரியான முடிவுகள் எடுக்கப்படும். தேவை இருந்தால் மட்டும் சர்வதேச பயணம் செய்யலாம் என்ற அறிவுறுத்தலில் இருந்து ஒரு சில நாடுகளுக்கு செல்லலாம் என்ற அறிவுறுத்தல் வெளியாவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக கூறப்படுகின்றது. அவ்வகையில் ஜெர்மனி, ஆஸ்திரியா, ஸ்பெயின், கிரீஸ், இத்தாலி, ஜிப்ரால்டர், பெல்ஜியம், நெதர்லாந்து மற்றும் போர்ச்சுகல் போன்ற நாடுகள் பாதுகாப்பான நாடுகளின் பட்டியலில் அறிவிக்கப்பட உள்ளது.
பிரிட்டனை சேர்ந்தவர்கள் ஆகஸ்ட் மாதம் துருக்கி மற்றும் துபாய் செல்வதற்கு அனுமதி அளிக்கப்படும் வாய்ப்புகள் அதிகம் உள்ளது. வெகுதொலைவு பயணமான சிங்கப்பூர், வியட்நாம் மற்றும் ஹாங்காங் போன்ற இடங்களுக்குச் செல்ல கோடைகாலத்தின் நடுப்பகுதி முதல் பிற்பகுதி வரை பொறுமையாக காத்திருக்க வேண்டியது அவசியம் ஆனால் அமெரிக்க ஐக்கிய நாடுகள் தென் அமெரிக்கா, மெக்சிகோ போன்ற நாடுகளுக்கு செல்வதற்கான தடை இந்த வருடத்தின் இறுதி வரை நீடிக்கும் என கூறப்பட்டுள்ளது.