கணவரிடம் விவாகரத்து பெற்று ஆசிரியையாக பணிபுரிந்து வந்த பெண் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது
ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த கைலாஷ் குமார் என்பவரது மகள் நீது. இவருக்கும் அதே மாநிலத்தை சேர்ந்த ஒருவருக்கும் கடந்த 2015 ஆம் ஆண்டு திருமணம் நடந்த நிலையில் கணவன் மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டினால் கணவரை பிரிந்து வாழ்ந்துள்ளார் நீது. அதோடு 2017 ஆம் ஆண்டு விவாகரத்தும் பெற்றார்.
இதன்பிறகு ஆசிரியையாக பணிபுரிந்து வந்துள்ளார் நீது. இந்நிலையில் நேற்று முன்தினம் பணி முடிந்து வீட்டிற்கு வந்த அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் விரைந்து வந்து அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்ததோடு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.