தமிழகத்தில் படித்த பட்டதாரி இளைஞர்கள் அரசு வேலை பெறுவதற்காக பயிற்சி வகுப்புகள் சென்று படித்து வருகின்றனர். மத்திய மற்றும் மாநில அரசு சார்பில் நடத்தப்படும் தேர்வின் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு அரசு பணி வழங்கப்பட்டு வருகிறது. மேலும் மத்திய மற்றும் மாநில அரசு வேலை மற்றும் வங்கி வேலை ஆகிய வேலையில் தேர்ச்சி பெறுவதற்காக இளைஞர்கள் பயிற்சி வகுப்பு மூலம் தங்களை தயார் செய்கின்றனர்.
இதையடுத்து தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக அரசு பணிக்கான புதிய பணியிடங்கள் அறிவிக்கப்படவில்லை. மேலும் அரசு அலுவலகங்களில் ஏற்கனவே காலியாக உள்ள இடங்களை நிரப்ப தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் வேலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வைத்து எஸ்.எஸ்.சி தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்பில் சேர்வதற்காக பதிவு செய்து கொள்ளலாம் என்று ஆட்சியர் குமரவேல் பாண்டியன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மத்திய அரசின் தேர்வாணையம் சார்பில் பல்நோக்கு பணியாளர், பெண்கள் படை பயிற்றுவிப்பாளர் மற்றும் மருத்துவ உதவியாளர் ஆகிய வேலைகளுக்கு 3261 பணியிடங்களுக்கு தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பணியிடங்களுக்கு www.ssc.nic.in என்ற இணையதளத்தில் விண்ணப்பித்த இளைஞர்களுக்கு மட்டும் இலவச பயிற்சி வகுப்புகள் தொடங்கி உள்ளது. மேலும் ஆர்வமுள்ள மாணவர்கள் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தை நேரில் அணுகலாம் அல்லது என்ற 0416-2290042 தொலைபேசி எண்ணில் தொடர்பு தொடர்பு கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.