Categories
மாநில செய்திகள்

SSC 3,261 காலிப்பணியிடங்கள்…. விண்ணப்பித்தோருக்கு அக்டோபர் 20 முதல்…. சூப்பர் அறிவிப்பு….!!!!

இந்தியாவில் மத்திய மற்றும் மாநில அரசு பணிகளுக்கு தேர்வாணையம் மூலமாக போட்டித் தேர்வுகள் நடத்தப்பட்டு பணியாளர்கள் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர். இந்தத் தேர்வில் தேர்ச்சி பெறுவதற்காக மாணவர்கள் தங்களை தயார் படுத்திக் கொண்டிருக்கின்றனர். அனைத்து மாநிலங்களிலும் போட்டித் தேர்வுகளுக்காக பயிற்சி மையங்கள் தொடங்கப்பட்டு மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இதனை தனியார் மையங்களும் நடத்தி வருகின்றன. இதில் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. தற்போது கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பயிற்சி மையங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன.

இந்நிலையில் தனியார் பயிற்சி மையங்களில் ஆன் லைன் மூலம் பயிற்சி வகுப்புகள் நடைபெற்று வருகிறது. தனியாரை தொடர்ந்து அரசும் பயிற்சி மையங்களை நடத்தி வருகிறது. தற்போது திருப்பத்தூர் மாவட்டத்தில் மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்தின் தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் அக்டோபர் 20 முதல் நடைபெற உள்ளது.

மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்தின் காலிப்பணியிடங்களுக்கு இணையதளம் வாயிலாக விண்ணப்பித்தவர்களுக்கு திருப்பத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி காட்டர் மையத்தில் இலவச பயிற்சி வகுப்புகள் நடைபெற இருக்கிறது. இதில் விருப்பம் உள்ளவர்கள் வேலை வாய்ப்பு அலுவலகத்திற்கு நேரில் சென்று தொடர்பு கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |