SSLC அசல் மதிப்பெண் சான்றிதழ்கள் பள்ளிகளில் இந்த முதல் வழங்கப்படுகின்றன.
SSLC பொதுத் தேர்வு முடிவு அண்மையில் வெளியிடப்பட்டது. தேர்வு முடிவுகளின் அடிப்படையில் அசல் மதிப்பெண் சான்றிதழ் இன்று முதல் வழங்கப்படுகிறது. மாணவ மாணவிகள் தாங்கள் படித்த பள்ளிகளில் சென்று அசல் மதிப்பெண் சான்றிதழ்களைப் பெற்றுக் கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கொரோனா காரணமாக அசல் மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும் போது பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குறித்து அரசு தேர்வுத் துறை வெளியிட்டுள்ளது. அதில் ஒரு மணி நேரத்திற்கு 20 மாணவர்களுக்கு வழங்க வேண்டும்.
வரிசைகள் இருக்கும் போது மாணவர்கள் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க அறிவுறுத்தபட வேண்டும். பள்ளிக்கு வருகை தரும் பெற்றோர் மாணவர்கள் கண்டிப்பாக முகக்கவசம் அணிந்து இருக்க வேண்டும் என தெரிவிக்கபட்டுள்ளது. சான்றிதழ்களை வழங்கும் பணியில் ஈடுபட்டிருக்கும் ஆசிரியர்களும் முகக்கவசம் மற்றும் கையுறைகள் அணிந்து இருப்பது அவசியம் என்பது உள்பட பல்வேறு அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன.