Categories
மாநில செய்திகள்

ஊழியர்களின் ஒரு நாள் சம்பளத்தை… நிவாரண நிதிக்கு வழங்கிய தமிழ்நாடு செவிலியர் சங்கம்…!!

செவிலியர் சங்கத்தை சார்ந்த 12 ஆயிரம் ஊழியர்கள் தங்களது ஒரு நாள் சம்பளத்தை முதல்வர் பொது நிவாரண நிதிக்கு வழங்கியுள்ளனர்.

தமிழகத்தில் கடந்த மாதம் முதலே கொரோனா தொற்று தீவிரமாக பரவி வருகிறது. இவற்றை கட்டுப்படுத்துவதற்கு தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. தமிழகத்தில் இன்று முதல் ஒரு வார காலத்திற்கு தளர்வுகள் அற்ற ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு பொது நிறுவனங்கள், பொதுமக்கள், பிரபலங்கள் தங்களால் இயன்ற தொகையை கொரோனா நிவாரண நிதிக்காக வழங்க வேண்டும் என தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் கேட்டுக்கொண்டிருந்தார்.

இதையடுத்து பல பிரபலங்களும் நிறுவனங்களும், பொதுமக்களும் தங்களால் இயன்றதை முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு வழங்கி வருகின்றனர். இந்நிலையில் பொது நிவாரண நிதிக்கு தமிழ்நாடு செவிலியர் சங்கத்தை சார்ந்த 12 ஆயிரம் ஒப்பந்த ஊழியர்கள் தங்களின் ஒரு நாள் ஊதியமாக மொத்தம் 56 லட்சமும், அரசு பணியில் இருந்து ஓய்வு பெற்ற திருமதி சாந்தாமணி 20 ஆயிரமும் முதல்வரிடம் அளித்துள்ளார். இவர்களது சேவையை மனதார பாராட்டுவோம் என சுகாதார அமைச்சர் கூறியுள்ளார்.

Categories

Tech |