தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட மகிழ்ச்சி புறத்தில் குடியிருப்பு பகுதியில் தேங்கியுள்ள மழை நீரை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம் மகிழ்ச்சிபுரம் பகுதியில் கடந்த வாரம் கனமழை பெய்த நிலையில், மழை நீர் வழிந்தோட முறையான வசதி அங்கு இல்லாததால் தெருக்களிலே நீர் தேங்கியுள்ளது. இதனால் நீரில் கொசுக்கள் உற்பத்தியாகி நோய் பரவும் அபாயம் உள்ளதால் அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் மழைநீர் மற்றும் கழிவு நீர் வழிந்தோடும் வகையில் வசதிகளை கொண்ட தார் சாலைகளை அமைத்துத் தர வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.