சேலம் சீலநாயக்கன்பட்டி தேசிய நெடுஞ்சாலை பகுதியில் மழைநீர் தேங்கி போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதால் அப்பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
வடகிழக்குப் பருவமழை அதிகமாகியுள்ளதால், தமிழகம் முழுவதும் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. இதனால் கடந்த சில நாட்களாகவே சேலத்தில் இரவு நேரங்களில் கனமழைவெளுத்து வாங்கி வருகிறது. இந்நிலையில் நேற்று இரவு பெய்த மழையினால் இன்று நகரின் பல முக்கிய பகுதிகளில் மழைநீர் தேங்கி போக்குவரத்துபாதிக்கப்பட்டுள்ளது.இதேபோல சீலநாயக்கன்பட்டியிலுள்ள திருச்சி to நாமக்கல் NH4 சர்வீஸ் சாலையில் மழைநீர் தேங்கி போக்குவரத்து பாதிக்கப்பட்டதால்,
அப்பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட முயற்சி செய்தனர். இது குறித்து பொதுமக்கள் பேசுகையில், ‘NH4 சாலையின் வடிகால்கள் சரியாக பராமரிக்கப்படாததால் மழைநீர் வெளியேறாமல் சாலைகளிலே தங்கிவிடுகிறது. இது பற்றி மாவட்ட நிர்வாகத்திடம் பல முறை புகார் அளிக்கப்படும் கண்டுகொள்வதில்லை’ என்றனர். மேலும் பாதிப்பு தகவலறிந்து அங்குவிரைந்த அன்னதானப்பட்டி காவல் துறையினரிடன் பேச்சுவார்த்தை நடத்தி, உடனடியாக மாநராட்சி அலுவலர்களை வரவழைத்து பொக்லைன் இயந்திரம் மூலம் வடிகால்களின் அடைப்புகளைச் சரி செய்தனர். நீர் தேக்கம் குறைந்ததும் பொதுமக்கள் அப்பகுதியில் இருந்து கலைந்துசென்றனர்.