தமிழகத்தில் கொரோனா கட்டுப்பாட்டில் இருப்பதை பொறுத்துக்கொள்ள முடியாமல் திமுக இடையூறு செய்ய முயற்சிப்பதாக அமைச்சர் ஜெயக்குமார் குற்றம்சாட்டியுள்ளார்.
சென்னை பட்டினப்பாக்கத்தில் செய்தியாளரிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், கொரோனா விவகாரத்தில் அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்டுமாறு திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்துவது கேலிக்கூத்தானது என்றார். ஆரம்ப கட்டத்தில் மாண்புமிகு முதலமைச்சருக்கும், தமிழக அரசின் நடவடிக்கைகளுக்கும் பாராட்டு தெரிவிப்பது போல் நடித்து விட்டு மீண்டும் ஸ்டாலின் பழைய படி குறை கூற ஆரம்பித்துவிட்டார்.
எந்த வகையிலெல்லாம் இடையூறு கொடுக்க முடியுமோ எந்த வகையிலெல்லாம் திசை திருப்பி விட முடியுமோ என எல்லாவிதமான இடையூறு நடவடிக்கையும் திமுக தலைவர் ஸ்டாலின் கையில் எடுத்துக்கொண்டு செயல்பட்டு வருகிறார் என குற்றம் சாட்டினார். இது தற்போது அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.