Categories
அரசியல் மாநில செய்திகள்

“Confirm பண்ணியாச்சு” அமைச்சரே அடுத்து என்ன பொய் சொல்ல போறீங்க….? மு.க.ஸ்டாலின் கேள்வி….!!

கொரோனாவால் 47 மருத்துவர்கள் உயிரிழந்தது குறித்து மு.க.ஸ்டாலின் மீண்டும் கேள்வி எழுப்பியுள்ளார். 

கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக மத்திய மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.கொரோனாவிடமிருந்து நம்மை பாதுகாத்துக் கொள்வதற்காக அனைவரும் வீட்டில் பாதுகாப்பாக இருந்து வருகிறோம். ஆனால் மருத்துவர்கள், செவிலியர்கள், துப்புரவு பணியாளர்கள், காவல்துறை அதிகாரிகள், சுகாதாரத்துறை அதிகாரிகள் என நமக்காக பணி புரிந்து கொண்டிருப்பவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிலர் உயிர் இழக்கும் சூழ்நிலையும் ஏற்படுகிறது. அந்த வகையில்,

சமீபத்தில் தமிழகத்தில் 47 மருத்துவர்கள் கொரோனாவால்  உயிரிழந்துள்ளதாக பட்டியல் ஒன்று வெளியாகியது. இது பொய்யான பட்டியல் என அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார். இதை தொடர்ந்து திமுக தலைவர் மு க ஸ்டாலின், 47 மருத்துவர்கள் தமிழகத்தில் உயிரிழந்ததை இந்திய மருத்துவ கவுன்சிலிங் ஒப்புக்கொண்டுள்ளது. நீங்கள் ஏன் உண்மையை மறைக்கிறீர்கள்? என கேள்வி எழுப்பியதற்கு,

மீண்டும் இது பொய்யான தகவல் என அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார். இந்நிலையில் கொரோனா தொற்றால்  47 மருத்துவர்கள் உயிரிழந்ததாக இந்திய மருத்துவ சங்கத்தின் தமிழ்நாடு கிளை அதிகாரப்பூர்வமாக தற்போது அறிவித்துள்ளது. இதற்கு அமைச்சர் விஜயபாஸ்கர் என்ன பொய் சொல்லப் போகிறார்? என திமுக தலைவர் மு க ஸ்டாலின் மீண்டும் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் கொரோனா  விவகாரத்தில் உண்மையை மறைக்க வேண்டாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார். 

Categories

Tech |