Categories
அரசியல்

அரசு திட்டத்தில் முறைகேடு….. 10 ஆண்டுகள் பின்னால் போய்விட்டது…. மாவட்ட ஆட்சியர் மீது மு.க.ஸ்டாலின் புகார்….!!

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் மீது எதிர்க்கட்சித் தலைவர் மு க ஸ்டாலின் புகார் அளித்துள்ளார்.

ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தில் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் முறைகேடு செய்வதாக பல புகார்கள் தொடர்ந்து எழுந்து வருகிறது. இது குறித்து திமுகவின் புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகம் களத்தில் இறங்கி விசாரணை நடத்தியதில் முறைகேடு உண்மை என தெரிய வருகிறது என எதிர்க்கட்சித் தலைவர் மு க ஸ்டாலின் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் மீது புகார் தெரிவித்துள்ளார். அதில்,

பேக்கேஜ் டெண்டர் விவகாரத்தில் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் ஊராட்சிமன்ற தலைவர்களை தொடர்ந்து மிரட்டுவதாகவும், இவரது இந்த செயலால் புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகமே 10 ஆண்டுகளுக்குப் பின்னால் போய்விட்டது எனவும் குற்றம் சாட்டியுள்ளார். மேலும் அவர் மீது விரைவாக தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அந்த புகாரில் குறிப்பிட்டுள்ளார். 

Categories

Tech |