ஸ்தேர்தலில் வெற்றி பெற்ற பின் நேற்று நள்ளிரவு கலைஞர் சமாதியில் ஆசிபெற்ற பிறகு செய்தியாளர்களை சந்தித்த திமுக தலைவர் முக ஸ்டாலின், தேர்தல் நேரத்தில் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் என்னென்ன பணிகளை ஆற்றுவோம் என்று தேர்தல் அறிக்கையில் வாக்குறுதிகளாக.. உறுதிமொழியாக கொடுத்து இருக்கிறோமோ அவைகளை எல்லாம் படிப்படியாக நாங்கள் பொறுப்பேற்ற நாளில் இருந்து தொடர்ந்து அதை நிறைவேற்றுவதற்கான முயற்சிகளில் முழுமையாக எங்களை ஒப்படைத்துக் கொண்டு பணியாற்றுவோம் என்ற உறுதியை நான் இந்த நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறேன்.
எப்படி ஐந்தாண்டு காலத்திற்கு தேர்தல் அறிக்கை தந்து இருக்கிறோமோ அதைப்போல பத்தாண்டு காலத்தை அடிப்படையாக வைத்து, தொலைநோக்கு பார்வையோடு ஏழு அறிவிப்புகளை நான் ஏற்கனவே அறிவித்து இருக்கிறேன். அவைகளையும் நிறைவேற்றுவதற்கான முயற்சிகளில் முழுமையாக ஈடுபட்டு தொடர்ந்து பணியாற்றுவோம். அண்ணா வழி நின்று, கலைஞர் எங்களுக்கு பயிற்றுவித்து இருக்ககூடிய வழியில் நின்று, எங்களுடைய கடமையை நிச்சயமாக நிறைவேற்றுவோம் என்று நான் உறுதி அளித்து கொள்கிறேன் என தெரிவித்தார்.