Categories
அரசியல் மாநில செய்திகள்

அம்மா ஆட்சின்னு தம்பட்டம் அடித்த அதிமுக…பிள்ளையார் சுழி போட்ட ஸ்டாலின்…. கெத்து காட்ட போகும் உப்பிக்கள்…

நேற்று நடந்த தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் திமுக முன்னிலை பெற்று வெற்றி பெற்றது. கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சியிலிருந்த அதிமுகவின் அரசு முடிவுக்கு வந்த நிலையில் திமுக ஆட்சி அமைக்கும் நடைமுறைகளை தொடங்கியுள்ளது. இதனிடையே நேற்று இரவு மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா சமாதி முன்னாள் திமுக தலைவர் கருணாநிதி சமாதியில் மரியாதை செலுத்திய பின், செய்தியாளரிடம் பேசிய திமுக தலைவர் ஸ்டாலினிடம் தாராபுரத்தில் திமுக வேட்பாளர் முன்னிலையில் இருந்த நேரத்தில் கடைசியில் வாக்கு எண்ணிக்கை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது, இதை எப்படி பார்க்கிறீர்கள் என்ற கேள்விக்கு…. நிறுத்தி வைக்கப்பட்டு இந்த புகார் வந்து எங்களுடைய வழக்கறிஞர்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளோடு பேசி அதற்குப் பிறகு முடிவு அறிவிக்கப்பட்டது. நிலைமையை தெரிந்துவிட்டு தான் நான் வந்திருக்கிறேன்.

தேசிய தலைவர்கள் மற்றும் பல்வேறு மாநில கட்சி தலைவர்கள் வாழ்த்து செய்திகளை சொல்லி இருக்கிறார்கள். அவர்களுக்கு இந்த நேரத்தில் என்ன சொல்ல விரும்புகிறீர்கள் என்ற கேள்விக்கு…. அனைவருக்கும் நன்றி சொல்லி இருக்கிறேன். உடனடியாக அவர்களுக்கு நான் பதில் தந்து இருக்கிறேன். அனைவருடைய அறிவுரை, ஆலோசனைகளையும் ஏற்று நான் செயல்படுவேன், ஒத்துழைப்பு தரவேண்டும் என்ற வேண்டுகோளையும் அவர்களிடத்தில் எடுத்து வைத்திருக்கிறேன். ஆறாவது முறையும் தலைவர் கலைஞர் அவர்களுடைய ஆட்சி அமைய வேண்டும் என்று விரும்பி கொண்டிருந்த அந்த ஆசை நிறைவேறாமல் போனது இன்றைக்கு நிறைவேறி இருப்பது எனக்கு மகிழ்ச்சியை தருகிறது என ஸ்டாலின் தெரிவித்தார். அதிமுக அரசு நடந்த போது இது அம்மாவின் அரசு என ஆட்சி செய்த அதிமுக தரப்பினர் கொண்டாடி வந்த நிலையில் இனி கலைஞருடைய அரசு என திமுகவினர் புகழாரம் சூட்டி கொள்வார்கள் என தெரிகின்றது.

Categories

Tech |