கொரோனா மரணத்தை மறைக்க வேண்டாம் என ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
சமீபத்தில் கொரோனாவால் இந்தியாவில் இறந்த மருத்துவர்களின் பட்டியல் மாநில வாரியாக வெளியிடப்பட்டது. அந்தப் பட்டியலில் தமிழகம் முதலிடம் பிடித்து இருந்தது. அதில் தமிழகத்தில் 43 மருத்துவர்கள் கொரோனாவால் மரணமடைந்துள்ளதாக செய்தி வெளியாகியது. இந்த செய்தி முற்றிலும் பொய்யானது. இதனை யாரும் நம்ப வேண்டாம் என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி அளித்ததுடன், பொய்யான செய்தி பரப்புவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்தார்.
தற்போது இது குறித்து ஸ்டாலின் அவர்கள் கேள்வி ஒன்றை எழுதியுள்ளார். அதில், இறந்தவர்களின் எண்ணிக்கையை அமைச்சர் விஜயபாஸ்கர் அறிவிப்பாரா? தமிழகத்தில் 43 மருத்துவர்கள் கொரோனாவால் இறந்துள்ளார்கள் என்ற செய்தியை அமைச்சர் விஜயபாஸ்கர் மறுத்த நிலையில், இந்திய மருத்துவ கவுன்சில் அதனை உறுதிப்படுத்தியுள்ளது என்றும், மரணங்களை மறைக்க வேண்டாம் எனவும் வலியுறுத்தியுள்ளார்.