Categories
அரசியல் மாநில செய்திகள்

“‘சம்திங்’ தந்தால் தான் உதவிகளை பெற முடியும்” ஸ்டாலின் அனல் பறக்கும் பிரச்சாரம்..!!

‘சம்திங்’ தந்தால் தான் நலத்திட்ட உதவிகளை பெற முடியும் என்ற நிலை உள்ளது என்று முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

நாங்குநேரி, விக்கிரவாண்டி ஆகிய 2 தொகுதிகளுக்கு  அக்டோபர் 21-ல் இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இதில்  திமுக சார்பில் விக்கிரவாண்டி தொகுதியில்  வேட்பாளராக  நா. புகழேந்தியும்,  திமுகவின் கூட்டணி கட்சியான தமிழக காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக ரூபி மனோகரனும்  போட்டியிடுகின்றனர். இடைத்தேர்தலுக்காக அதிமுக, நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகள் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.

Image result for mk Stalin

அதேபோல திமுகவும் அனல் பறக்கும் பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறது. அதன்படி இன்று நாங்குநேரி தொகுதி செங்குளம் கிராமத்தில் காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரனுக்கு வாக்கு சேகரிக்க முக ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது, தற்போது ‘சம்திங்’ தந்தால் தான் நலத்திட்ட உதவிகளை பெற முடியும் என்ற நிலை உள்ளது. எதிர்க்கட்சியாக இருப்பதால் மக்களின் பல பிரச்சினைகள் தீர்க்கப்படாமல் உள்ளன என்றார். மேலும் குட்கா, உள்ளிட்ட தடைசெய்த புகையிலைப் பொருட்கள் பள்ளி பகுதி உட்பட அனைத்து இடங்களிலும் விற்பனை செய்யப்படுவதாகவும்  குற்றச்சாட்டை முன் வைத்து ஸ்டாலின் பேசினார்.

Categories

Tech |