”எடப்பாடி ஆட்சிக்கு, மே 19ம் தேதி இறுதி மணி அடிக்க தயாராகுங்கள் வாக்காளர்களே” என வாக்காளர்களுக்கு மு.க.ஸ்டாலின் அறைக்கூவல் விடுத்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம், ஒட்டபிடாரம் சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் சண்முகையா ஆவார். இவரை ஆதரித்து, திமுக தலைவர் ஸ்டாலின், தாளமுத்து நகர், தருவை குளம், புதியமுத்தூர் ஆகிய பகுதிகளில் பிரச்சாரம் செய்தார் . அப்போது அவர் பேசுகையில், ”பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத ஆட்சி எடப்பாடி ஆட்சி ” என அவர் விமர்சித்தார். மேலும் தூத்துக்குடி முதல் சென்னை வரை புதிய ரயில் சேவை தொடங்கப்படும் என ஸ்டாலின் உறுதி அளித்தார்.