OPS என்னை பார்த்து சிரித்ததால் அதனால் அவருடைய முதல்வர் பதவியை இழந்தார் என்று திமுக தலைவர் முக.ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.
கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் போது பணம் பட்டுவாடா புகாரில் சிக்கிய வேலூர் மக்களவைத் தொகுதிக்கான தேர்தல் நிறுத்தி வைக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து ஆகஸ்ட் 5_ஆம் தேதி வேலூர் மக்களவைக்கு தேர்தல் நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதைத்தொடர்ந்து திமுக , அதிமுக , நாம் தமிழர் என மும்முனைப் போட்டியாக அரசியல் காட்சிகள் வேட்பாளரை அறிவித்து பிரசாரத்தை தொடங்கினர். இன்று மாலை 6 மணியோடு வேலூர் மக்களவைத் தேர்தல் பிரச்சாரம் முடிவடைந்தது.
இந்நிலையில் திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வேட்பாளர் கதிர் ஆனந்த்_க்கு ஆதரவாக வேலூர் பழைய பேருந்து நிலையத்தின் அருகே பிரச்சார பொதுக்கூட்டம் நடைபெற்றது.இதில் கூட்டணி கட்சித்தலைவர்கள் கலந்து கொண்டனர். திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் , விசிக , மதிமுக மற்றும் இடதுசாரி கட்சிகள் தலைவர்கள் பங்கேற்ற்று வேலூர் மக்களவை வேட்பாளர் கதிர் ஆனந்த்_க்கு ஆதரவாக பிரச்சாரம் மேற்கொண்டனர்.