தமிழர்களின் வரலாறு தெரியாமல் விமர்சிப்பது ஆணவத்தின் வெளிப்பாடு, ஆதிக்கத்தின் அடையாளம் என்று மு.க ஸ்டாலின் கிரண் பேடிக்கு கண்டனங்கள் தெரிவித்துள்ளார்
தற்போது சென்னை மழை பொழிவு இல்லாமல் கடுமையான வறட்சியைச் சந்தித்து வருகின்ற நிலையில், புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி நேற்று தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில்,
சாத்தியமான பதில்களுடன் ஒரு கேள்வி: ”இந்தியாவின் 6-ஆவது மிகப்பெரிய நகரமான சென்னை தற்போது வறட்சியின் முதல் நகரமாக மாறியுள்ளது. 4 ஆண்டுகளுக்கு முன்பு பெய்த மழையால் அதே நகரம் வெள்ளத்தில் மூழ்கியது. பிரச்சினை எங்கே?
பதில் : மோசமான ஆட்சி, ஊழல் அரசியல், அலட்சிய அதிகாரம் உள்ளிட்டவற்றால் வறட்சி ஏற்பட்டுள்ளது. அத்துடன் மக்களின் சுயநல எண்ணமும், கோழைத்தனமான அணுகுமுறையும்கூட முக்கிய காரணமாக உள்ளது” என்று பதிவிட்டுள்ளார்.
https://twitter.com/thekiranbedi/status/1145205925109592064
இந்நிலையில், திமுக தலைவர் முக ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், தமிழக மக்களை சுயநலமிக்கவர்கள், கோழைகள் என அநாகரிகமாக விமர்சித்திருக்கும் கிரண்பேடிக்கு எனது கடுமையான கண்டனங்கள்! தமிழர்களின் வரலாறு தெரியாமல் விமர்சிப்பது ஆணவத்தின் வெளிப்பாடு;ஆதிக்கத்தின் அடையாளம். கிரண்பேடி தமது விமர்சனத்தைத் திரும்பப் பெற்று உடனடியாக மன்னிப்புக் கோர வேண்டும்” என்று பதிவிட்டுள்ளார்.
தமிழக மக்களை சுயநலமிக்கவர்கள், கோழைகள் என அநாகரிகமாக விமர்சித்திருக்கும் கிரண்பேடிக்கு எனது கடுமையான கண்டனங்கள்!
தமிழர்களின் வரலாறு தெரியாமல் விமர்சிப்பது ஆணவத்தின் வெளிப்பாடு;ஆதிக்கத்தின் அடையாளம். கிரண்பேடி தமது விமர்சனத்தைத் திரும்பப் பெற்று உடனடியாக மன்னிப்புக் கோர வேண்டும் pic.twitter.com/mKRdxV76MN
— M.K.Stalin (@mkstalin) July 1, 2019