Categories
அரசியல் மாநில செய்திகள்

கலைஞர் ”வாரிசு” என்பதால் வரல….! ஏன் இதையும் பேச மறுக்குறீங்க ? C.Mயை வாரிசு அரசியல்னு சொல்பவர்களுக்கு திருமா பதிலடி …!!

திமுகவின் மறைந்த தலைவர் இனமான பேராசிரியர் நூற்றாண்டு விழாவில் கலந்து கொண்டு பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், அண்ணன் அவர்கள் ( ஸ்டாலின் ) இன்றைக்கு இந்த தலைமை பொறுப்பிற்கு வந்திருக்கிறார் என்று சொன்னால்,  அதற்கு அவர் பட்டபாடு என்பது ? அவர் சந்தித்த சவால்கள்,  அவர் சந்தித்த நெருக்கடிகள் சாதாரனது அல்ல.  கலைஞரின் பிள்ளை என்பதினால் வந்து விடுவதில்ல.

கலைஞரின் பிள்ளைகள் எல்லாம் இந்த இடத்திற்கு வர முடியவில்லை. தளபதியால் மட்டும் தான் வர முடிந்தது என்றால்,  தளபதி அதற்குரிய தகுதியோடும்…  அதற்குரிய வலிமையோடும் இருந்தார் என்பதுதான் அதற்குரிய சிறப்பு. வாரிசு, குடும்ப வாரிசு என்று சொல்கிறார்கள்…  இளம் பருவத்தில் இருந்து இவர் சந்தித்த நெருக்கடிகளை யாரும் பேசுவதில்லை. இவர் சந்தித்த சவால்களை யாரும் பேசுவதில்லை.

எப்படி படிப்படியாக பொறுப்புகளை ஏற்று இந்த உயரத்திற்கு வந்து இருக்கின்றார், திராவிட முன்னேற்றக் கழகம் என்ற ஒரு கட்சியை இன்றைக்கு கட்டிக் காப்பாற்றி,  வெற்றிகரமாக வழி நடத்தி கொண்டிருக்கிறார் என்பதை பற்றி யாரும் பேசுவதில்லை. அண்ணாவோடு கழகம் அவ்வளவுதான் என்று எண்ணியிருந்தவர்களுக்கு கலைஞர் ஒரு சவாலாக எழுந்தார் . திராவிட முன்னேற்றக் கழகத்தை எந்த சக்தியாலும் வீழ்த்த முடியாது என்பதை இந்த உலகுக்கு உணர்த்தினார்.  ஐம்பதாண்டு காலம் தலைமை ஏற்று வழி நடத்தினார்.

கலைஞருக்கு பிறகு அவ்வளவு தான் என்று பலரும் எண்ணிக் கொண்டிருந்த வேலையில்,  இந்த கழகத்தை யாராலும் எதுவும் செய்து விட முடியாது.  இதை கட்டி காப்பாற்றுவதற்கு நான் இருக்கிறேன் என்று வந்தவர் நம்முடைய தளபதி அவர்கள்…   வெறும் கலைஞரின் பிள்ளை என்பதற்காக வாரிசு அடிப்படையில் வந்து அமர்ந்து விட்டவர் அல்ல. அடுத்த இளம் தலைமுறை இவரைத்தான் நம்பி இருக்கிறது என்பதை அடையாளம் காட்டியவர் இளமான பேராசிரியர் பெருந்தகை அவர்கள் தான் என தெரிவித்தார்.

Categories

Tech |