அதிமுக சார்பில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி, என்ன நடக்கின்றது என்று ? முதலமைச்சர் பார்த்தால் தானே தெரியும். முதலமைச்சருக்கு ஒன்றும் தெரியாது. பொம்மை முதலமைச்சர் ஆச்சே. ஆக உளவுத்துறையில் என்ன நடக்கிறது ? என்று ஆராய்ந்து, அதைக் கேட்டு, காவல்துறைக்கு உத்தரவு போட்டு, எந்தெந்த இடத்தில் இருந்து இந்த இந்த வழியாக, எந்தெந்த மாநிலத்தின் வழியாக போதை பொருள் வருது, என தடுத்து நிறுத்துங்கள்.
எந்த இடத்தில் போதை பொருள் விற்பனை நடைபெறுகின்றது அதை கண்டறிந்து நடவடிக்கை எடுங்க என்று சொன்னால், காவல்துறை நடவடிக்கை எடுக்கும், எதுவுமே செய்யல. அதோட திமுக நிர்வாகிகள் தான் அதிகமாக போதை பொருள் விக்கிறார்கள். எப்படி போலீஸ் பிடிக்கும் ? காவல்துறையால் பிடிக்க முடியுமா திமுககாரர்களை…
சட்டசபையில் காவல்துறை மானியம் நடக்கிறது. முதலமைச்சர் கையில் காவல்துறை இருக்கிறது, காவல்துறை மானியத்தில், புத்தகம் கொடுக்கிறார். பள்ளிக்கு அருகிலே, கல்லூரிக்கு அருகிலே கஞ்சா விற்பனை நடக்கிறது. 2134 பேர் இந்த விற்பனையில் ஈடுபட்டு இருக்கிறார்கள். ஆனால் கைது செய்தது 148 பேர். விற்றது 2134 பேர், மத்தவர்கள் எல்லாம் யாரு? அதான் திமுககாரர்கள்.
பிறகு எப்படி போதை பொருளை தடுக்க முடியும், அவரே கொடுத்த புத்தகத்தில் இருக்கிறது. நான் ஒன்னும் மறைத்து பேசவில்லை, பொய் பேசவில்லை. ஒரு நாட்டினுடைய முதலமைச்சர் வருங்கால சந்ததிகள், மாணவர்கள், இளைஞர்கள் இந்த நாட்டை ஆளக்கூடிய பொறுப்பில் இருக்கின்றவர்கள், ஆகவே இந்த மாணவர்கள் சீரழியக்கூடிய காட்சியை நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம். ஆக போதை பொருளை தடுக்க வேண்டும் என்று சொன்னால், ஏதாவது ஒரு காரணம் சொல்கிறார்.
அதை தட்டிக் கழிப்பது. ஆகவே இனிமேலாவது விடியாத திமுக அரசு விழித்துக் கொண்டு சட்ட ஒழுங்கை பாதுகாக்க வேண்டும், போதை பொருள் விற்பனையை முழுமையாக தடை செய்ய ஆக்கபூர்வமான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று இந்த விடியா திமுக முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களை கேட்டுக்கொள்கின்றேன் என தெரிவித்தார்.