Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

#குடிகெடுக்கும்_எடப்பாடி : மனைவி, மகனோடு போராடிய ஸ்டாலின் ….!!

மதுக்கடைகளை திறந்ததற்கு எதிராக தமிழகம் முழுவதும் திமுக கூட்டணி கட்சியினர் போராட்டம் நடத்தினர்.

தமிழகத்தில் இன்று முதல் மது கடைகள் திறக்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது. அதன்படி காலை 10 மணி முதல் சென்னை தவிர மற்ற பகுதிகள் மதுக்கடைகள் திறக்கப்பட்டன. இதனிடையே மது கடைகளை திறக்கக் கூடாது என்று கண்டித்தது இரண்டு தினங்களுக்கு முன்பு திமுக கூட்டணி கட்சி சார்பில் போராட்டம் அறிவிக்கப்பட்டது. மதுக்கடைகளை திறப்பதை கண்டித்து அவரவர் வீடுகளுக்கு வெளியே வந்து கருப்பு சின்னம் அணிய வேண்டும்.

சமூக விலகலை கடைப்பிடித்து, 5 பேருக்கு மிகாமல் 15 நிமிடங்கள் நின்று கொரோனவை கட்டுப்படுத்துவதில் அதிமுக தோல்வி அடைந்துவிட்டது என்றும், தமிழகம் கேட்ட நிதியை மத்திய அரசு  வழங்காததை கண்டித்தும் கோஷம் எழுப்ப வேண்டுமென்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. இதையடுத்து திமுக கூட்டணி கட்சி தலைவர்கள் அவரவர்கள் இருக்கும் இடத்தில் இருந்து போராட்டம் நடத்தினர்.

இந்நிலையில் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனது இல்லத்தில் திமுக தலைவர் முக ஸ்டாலின் கருப்பு சட்டை, கருப்பு மாஸ்க் அணிந்து போராட்டம் நடத்தினார். ஒரு கைகளில் கருப்பு கோடியும், ஒரு கையில் கோஷ அட்டையும் வைத்து முழக்கமிட்டார். இதில் அவரின் மனைவி துர்கா ஸ்டாலின், மகன் உதயநிதி ஸ்டாலின் என குடும்பத்தோடு கலந்து கொண்டு மதுக்கடை திறப்புக்கு எதிராக போராட்டம் நடத்தினார். இதனிடையே #குடிகெடுக்கும்_எடப்பாடி என்ற ஹேஷ்டாக் சமூகவலைத்தளத்தில் ட்ரெண்டாகி வருகின்றது.

Categories

Tech |