தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் எதிர்பார்க்காத அளவு இருந்து வருவது மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மக்கள் அனைவருக்கும் தானாக அச்சம் ஏற்படும் வகையில் தினசரி பாதிப்பு எண்ணிக்கை உயர்ந்து கொண்டே செல்கிறது. கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை ஒருபக்கம் அதிகரித்துக் கொண்டு சென்றாலும், மறுபக்கம் குணமடைந்து வீடு திரும்புவோர் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்து, நாட்டிலேயே அதிகமானோரை குணப்படுத்தியும் மாநிலங்கள் வரிசையில் தமிழகம் இரண்டாவது இடத்தில் நீடிக்கிறது. இதுவரை 14 ஆயிரத்து 901 பேர் குணமடைந்து வீடு திரும்பியதால் 12,232 பேர் மட்டுமே சிகிச்சை பெற்று வருகின்றனர்.
குறைவான இறப்பு வீதம்:
கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு முயற்சியை மேற்கொண்டு வருகிறது. இதனால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலங்களின் வரிசையில் 2ம் இடத்தில இருக்கும் தமிழகம் இறப்பு வீதத்தை மிக மிக குறைந்த அளவில் கட்டுப்படுத்தி வைத்துள்ளது. கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட பல மாநிலங்கள் அதிகமான உயிர் இழப்பை சந்தித்து பெரும் சோகத்தில், இருந்து வரும் நிலையில் தமிழகம் உயிரிழப்பை கட்டுப்படுத்தி பாராட்டை பெற்று வருகின்றது.
அனைவரும் பாராட்டு:
நாட்டிலேயே குறைந்த உயிரிழப்பு என்ற பாராட்டை உலக சுகாதார மையம், இந்திய மருத்துவக் கவுன்சில், மத்திய சுகாதாரத்துறை ஆகியவற்றிடம் இருந்து பெற்ற தமிழகம் நாட்டிலேயே அதிகமான பரிசோதனை செய்தும் கலக்கி வருகின்றது. இருந்தாலும் ஒற்றை இலக்கத்தில் பதிவாகி வந்த இறப்பு வீதம் கடந்த 5 நாட்களாக இரட்டை இலக்கத்தில் பதிவாகி வருகிறது தமிழக அரசுக்கு பெருத்த சவாலாக இருந்து வருகிறது.
ஆளுங்கட்சிக்கும் பெரும் சந்தேகம்:
இதனிடையே கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் WHO, பிரதமர், சுகாதாரத்துறை அமைச்சர், ICMR அதிகாரிகள் என அனைவரும் தமிழகத்தை பாராட்டி முன்மாதிரியாக பார்த்தாலும் தமிழக எதிர்க் கட்சியான திமுக எதிர்மறையாக பார்த்துக் கொண்டே தமிழக அரசை தொடர்ந்து விமர்சித்து வருகின்றது. இது ஆளும் அரசுக்கு பெருத்த சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழக முதலமைச்சர் கூட பலமுறை வெளிப்படுத்தியுள்ளார் பாராட்டவில்லை என்றாலும் பரவாயில்லை, பணி செய்பவர்களை விமர்சிக்காதீர்கள் என்று ஆனாலும் எதிர்க்கட்சி தொடர்ந்து அரசின் மீது விமர்சனங்களையும், குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றது.
பூதக்கண்ணாடி:
திமுக பூதக்கண்ணாடி போட்டுப் பார்த்தாலும் அதிமுக மீது குறை சொல்ல முடியாது என்றெல்லாம் ஆளுகட்சினர் சொல்லி வந்த நிலையில்தான் தற்போது தமிழகம் கொரோனாவில் பிற மாநிலங்களை விட மோசம் என்று சொல்லும் அளவுக்கு முக.ஸ்டாலின் ஒப்பிடு செய்து விமர்சித்துள்ளார். விமர்சிக்க வேண்டும் என்பதற்காக தேடி எடுத்து விமர்சித்துள்ளதாக ஆளும் கட்சியினர் வேதனையில் குமுறுகிறார்கள். இறப்பை குறைத்துள்ளதை பாராட்ட மனமில்லை என்று ஆளும் தரப்பினர் செல்லும் அளவிற்கு இந்த நிகழ்வு சென்று விட்டது.
என்ன நடந்தது?
நேற்று திமுக தலைவர் முக.ஸ்டாலின் வீடு வீடாக பரிசோதனையை மேற்கொள்ளுங்கள் என்ற தலைப்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில், ராஜஸ்தான், மத்திய பிரதேசம், உத்தரபிரதேசம், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களின் எண்ணிக்கையைவிட சென்னை மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்கள் அதிகம். கேரளா, அசாம், ஒடிசா, பஞ்சாப் ஆகிய மாநிலங்களை விட ராயபுரம் என்ற ஒற்றை மண்டல மண்டலத்தில் பாதிப்பு என்பது மிக மிக அதிகம் என குறிப்பிட்டு இருந்தார்.
இதற்க்கு முன்பும் இதே போல:
நேற்று மட்டும் முக.ஸ்டாலின் இப்படி அறிக்கை விட வில்லை. இதற்க்கு முன்பும் இதே போல அறிக்கையில் அதிக உயிரிழப்பில் தமிழகம் முதலிடம் என்று தெரிவித்திருந்தார். திமுக கூட்டணி கட்சிகள் சார்பில் போடப்பட்ட தீர்மானத்தில் அதிக உயிரிழப்பு நிகழ்ந்ததில்லை தென்னகத்தில் முதல் மாநிலமாக தமிழகம் இருப்பது, கொரோனாவை கட்டுப்படுத்துவதில் அதிமுக ஆட்சி தோல்வி அடைந்து விட்டது என்று குறிப்பிட்டு இருந்தார். குறைவான இறப்பு வீதத்திற்கு எந்த பாராட்டும் சொல்லாமல் விமர்சனம் செய்வதற்கு பாயிண்ட் மற்றும் வார்த்தைகளை பிடித்து அறிக்கை விடுவது ஆளும் கட்சியினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.