Categories
அரசியல் மாநில செய்திகள்

அவரிடம் போய் கேளுங்க… ”அமெரிக்கா போவதால், நீலகிரி போகல” EPS_யை சீண்டும் ஸ்டாலின் ..!!

முதல்வர் அமெரிக்கா செல்ல இருப்பதால் நீலகிரி செல்லவில்லை என்று ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்த திமுக தலைவர் முக.ஸ்டாலினிடம், செய்தியாளர்கள் முதல்வர் நேரடியாக செல்லவில்லை என்று ஸ்டாலின் கூறிய குற்றசாட்டு குறித்து கேள்வி எழுப்பிய போது இந்த கேள்வியை நீங்கள்  முதலமைச்சரிடம் நேரடியாக சந்தித்து கேளுங்கள். ஏன் அவர் நீலகிரிக்கு செல்லவில்லை அமெரிக்காவுக்கும் , லண்டனுக்கு செல்வதற்கு அவர் முயற்சி பண்ணிட்டு இருக்காரு  அதான் முதல்வர் நீலகிரி செல்லவில்லை என்று கூறினார்.

Image result for stalin edappadi palanisamy

தொடர்ந்து பேசிய ஸ்டாலின் , நான் தனிப்பட்ட முறையில் விளம்பரத்துக்காக நிவாரணம் கொடுக்கவில்லை மக்களவை , மாநிலங்களைபவை மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களின் தொகுதி மேம்பாட்டு நிதி 10 கோடி ரூபாய் கொடுத்துள்ளோம். முதல்வர் அரசின் நிதியை தான் ஒதுக்க போறாரு.  அவரின்  பாக்கெட்டிலிருந்தா கொடுக்காரு , அரசின் பணம் , அது மக்களின் வரிப்பணம். மக்களின் வரிப்பணத்தில் தான் அரசாங்கம் நடக்கிறது. அவரின் விமர்சனத்தை பத்தி எல்லாம் நான் கவலைப்படுவது இல்லை. இன்னைக்கு ஆளுங்கட்சி ஓரளவுக்கு செயல்படுவதற்குதிமுக_தான் காரணம் என்று ஸ்டாலின் தெரிவித்தார்.

Categories

Tech |