வெள்ளம் பதித்த பகுதிகளுக்கு ஸ்டாலின் விளம்பரப்படுத்த தான் சென்றுள்ளார் என்று தமிழக முதல்வர் விமர்சித்துள்ளார்.
நீலகிரியில் ஏற்பட்டுள்ள வெள்ள சேதாரங்களை ஆய்வு செய்து , நிவாரண பணிகளை மேற்கொண்ட திமுக தலைவர் முக.ஸ்டாலின் அரசு மழை வெள்ளம் குறித்து எந்த முன்னெச்சரிக்கையும் எடுக்கவில்லை என்றும் , அமைச்சர்கள் பப்ளிசிட்டி_காக்க வந்துள்ளார்கள் என்றும் குற்றம் சாட்டினார். இந்நிலையில் முக.ஸ்டாலின் இந்த குற்றச்சாட்டுக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பதிலளித்துள்ளார்.
கோவையில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக முதல்வர் கூறுகையில் , வருவாய் துறை அமைச்சர் பாதிப்புக்குள்ளான அடுத்த நாளே பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து அரசு என்ன நடவடிக்கை எடுக்கிறதோ அதை செய்து , என்ன தேவையே அதை நிறைவேற்ற சென்றுள்ளார். முக.ஸ்டாலின் தான் விளம்பரப்படுத்துவதற்காக , பத்திரிக்கைக்கும் , ஊடகத்துக்கும் விளம்பரத்தை செய்ய போயுள்ளார்.
நாங்கள் அப்படி அல்ல .அங்குள்ள மலைச் சரிவுகள், பாதிக்கப்பட்ட மக்களுக்கு முழுமையான நிவாரணத்தை நாங்கள் செய்வோம் . பின்னர் மாண்புமிகு துணை முதலமைச்சர் அவர்கள் நேரடியாக அந்த பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்ட இருக்கின்றார். அங்கு தேவையான நிதி ஒதுக்கீடு செய்து , மக்களுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுப்பதற்கும், நிவாரணப் பணிகளை மேற்கொள்வதற்கு அரசும் துரிதமாக நடவடிக்கை எடுத்து வருகின்றது.