திமுக தலைவர் முக.ஸ்டாலின் அரசின் மீது வைத்த குற்றச்சாட்டுக்கு தமிழக முதல்வர் பதிலடி கொடுத்துள்ளார்.
தமிழகத்தில் PCR பரிசோதனை கருவிகள் குறைவாக இருக்கின்றது, அது என்ன ? என்பதை முதல்வர் தெரிவிக்கவேண்டும், முறைகேடு நடந்துள்ளது என்றெல்லாம் திமுக தலைவர் முக.ஸ்டாலின் குற்றம் சாட்டி வந்தார். எதிர்க்கட்சி தலைவரின் குற்றசாட்டுவுக்கு தமிழக முதல்வர் மாஸ்ஸாக பதிலளித்து அனைத்து விவரங்களையும் புட்டு புட்டு வென அடுக்கினார். அதிலும் குறிப்பாக முக.ஸ்டாலின் ஒன்றை தவறவிட்டு விட்டார் என்று சொல்லிவிட்டு விமர்சனகளுக்கு பதிலடி கொடுத்தது அதிமுகவினரை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.
சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் ஆலோசனை:
நேற்று கொரோனா தடுப்பு ஆலோசனைக்கு பின்பு செய்தியாளர்களிடம் பேசிய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, எதிர்க்கட்சித் தலைவர் ஒரு குற்றச்சாட்டு சொன்னாரு. அந்தக் குற்றச்சாட்டுக்கு சில விளக்கங்களை இங்கே தெரிவிக்க விரும்புகின்றேன். முதலமைச்சர் மாவட்ட ஆட்சியாளர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் 9 லட்சத்து 14 ஆயிரம் பிசிஆர் கிட் இருப்பதாகவும், அதில் 4.66 லட்சம் பரிசோதனை செய்யப்பட்டதாகவும், மீதம் 4.47 லட்சம் பிசிஆர் கருவிகள் இருக்க வேண்டும் என்றும், ஆனால் முதல்வர் அவர்கள் 1.76 லட்சம் தான் கையில் இருப்பதாக சொல்லி இருக்கின்றார். அதில் ஒன்றை தவற விட்டுவிட்டார். என்னெவென்றால் மீதம் உள்ள எல்லா பரிசோதனை கருவிகள் ( PCR ) 43 பரிசோதனை மையங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
தவறான செய்தி:
1.7 லட்சம் கிட் ஆபீஸ்ல வச்சிருக்காங்க, மற்றவைகள் எல்லாம் கிட்டத்தட்ட 2 லட்சத்து 71 ஆயிரம் பிசிஆர் கிட் 43 பரிசோதனை மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. பரிசோதனை மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டால் தான் அந்த கருவியை பயன்படுத்தி பரிசோதனை செய்ய முடியும். ஆகவே வேண்டும் என்று திட்டமிட்டு ஒரு தவறான செய்தியை பரப்பி இருக்கிறார்கள்.அதில் குறிப்பிட்டு சொல்கிறார், ஊரடங்கு காலத்தை தன்னை முன்னிலைப் படுத்திக் கொள்ளவேண்டும் என்ற விளம்பரத்திற்காக ஊரடங்கை பயன்படுத்தியிருக்கிறார் முதலமைச்சர் என்று சொல்லி இருக்கிறார்.
விளம்பரத்துக்காக சொல்லுறாரு:
நான் எதோ முன்னிலைப்படுத்தி, விளம்பரப்படுத்துறேனா, அவர்தான் விளம்பரப்படுத்துவதற்காக இந்த அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார் என்று நான் கூறுகின்றேன். அரசு தெளிவாக சொல்லி இருக்கின்றது 2 லட்சத்து 71 ஆயிரம் பிசிஆர் கிட் 43 பரிசோதனை மையங்களுக்கு, பரிசோதனை செய்வதற்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதை விட்டுவிட்டு 1.76 லட்சம் தான் கையில் இருக்கிறது என்று அவர் தெரிவித்து இருக்கிறார். அது உண்மையல்ல, அரசாங்கத்தை பொறுத்தவரை சரியான முறையிலே இன்றைக்கு இந்த வைரஸ் தொற்று பணி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது என்று தெரிவித்துக் கொள்கின்றேன்.
இதுதான் உண்மை:
அதுமட்டுமல்லாமல் இதுவரைக்கும் 15 லட்சத்து 15 ஆயிரத்து 700 கிட் ஆணை வழங்கப்பட்டுள்ளது. இதுவரை பெறப்பட்டது 11 லட்சத்து 51 ஆயிரத்து 700 பெறப்பட்டது. நன்கொடையாக பெறப்பட்ட PCR கிட் 53 ஆயிரத்து 516, மத்திய அரசு 50,000 PCR கிட் வழங்கியது. மொத்தம் தமிழக அரசால் பெறப்பட்ட PCR கிட் 12 லட்சத்து 55 ஆயிரத்து 216. தற்போது நம்முடைய TNMS-இல் இருப்பு இருப்பது 4 லட்சத்து 59 ஆயிரத்து 800. மருத்துவமனைகளுக்கு பரிசோதனை செய்வதற்காக வழங்கப்பட்டது 7 லட்சத்து 95 ஆயிரத்து 416. இதுல பரிசோதனை செய்யப்பட்ட கருவிகளின் எண்ணிக்கை 5 லட்சத்து 03 ஆயிரத்தி 339. தற்போது மையங்களில் இருப்பாக இருக்கின்ற PCR கிட் எண்ணிக்கை 2 லட்சத்து 92 ஆயிரத்து 77 இருக்குது, இதுதான் உண்மை நிலவரம். இதை யாரும் மறைக்கவும் இலை, இதில் எந்தவித முறைகேட்டுக்கு வழி இல்லை என்பதை தெளிவுபட தெரிவித்துவிட்டேன்.