Categories
சென்னை மாவட்ட செய்திகள்

ஸ்டாலினுக்கு திகார் ரெடியா இருக்கு…. என்னை சங்கி என்று சொல்லாதீங்க…. அமைச்சர் ஆவேசம்

பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி என்னை சங்கி என்று கூறுபவர்களுக்கு திகார் சிறை காத்திருக்கிறது என கூறியுள்ளார்.

அமைச்சர் ராஜேந்திர பாலாஜி சென்னை நந்தனத்தில் இயங்கி வரும்ஆவின் நிறுவனத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தயாரிக்கப்பட்ட புதிய இனிப்புகளை அறிமுகம் செய்து வைத்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கடந்த ஆண்டு தீபாவளி இனிப்புகள் 80,000 கிலோ விற்க்கப்பட்டதாகவும் அவற்றை நடப்பாண்டில் ஒரு லட்சம் கிலோவாக உயர்த்த திட்டமிட்டுள்ளோம் என்றும் கூறியுள்ளார். திமுக கட்சி தென்மாவட்டங்களில் கலவரங்களை தூண்டி விடுகிறது. ஸ்டாலின் நாத்திக கொள்கையை தவறாக பின்பற்றுகிறார்.

தேவர் ஜெயந்திக்கு சென்று அங்கு கொடுத்த விபூதியை கீழே தட்டி விட்டது   நாகரிகமற்ற செயல் என்றும் கூறியுள்ளார். ஸ்டாலினுக்கு கடிதத்தில் எழுதி கொடுத்தால் மட்டுமே பேசத் தெரியும். அதிமுகவை குறைகூறும் ஸ்டாலினுக்கு வீட்டை விட்டு வெளியே வருவதற்கு தைரியம் இருக்கிறதா? என்னைப் போன்று தெருவில் வந்து பேச சொல்லுங்கள் என்று கூறியுள்ளார்.

 

அதிமுகவை பற்றி குறை கூறுவதற்கு ஸ்டாலினுக்கு தகுதி இல்லை என்று கூறிய அவர் விரைவில் ஸ்டாலின் தலைவர் பதவியை இழக்கப் போகிறார் என்றார் . ஸ்டாலினுக்கு திகார் ஜெயில் காத்திருக்கிறது என்றும் கூறியுள்ளார். அடுத்து வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் ஆட்சி அமைக்கப்போவது அதிமுக தான். என்னை சங்கி என்று கூறுபவர்களும், சிறையில் பிடித்து போடுவேன் என்று சொல்பவர்களுக்கும் திகார் சிறை காத்திருக்கிறது என கூறினார். பிரதமர் நரேந்திர மோடியை ஆதரிப்பதற்கு எங்களுக்கு வலுவான காரணம் உள்ளது. பாஜக ,அதிமுகவின் கூட்டணி கட்சி என்று அவர் தெரிவித்தார்.

Categories

Tech |