தமிழக முதல்வர் முக.ஸ்டாலின் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்து வீடியோ வெளிட்டுள்ளார். அதில் பேசியுள்ள முதல்வர் ஸ்டாலின், நீங்கள் அளிக்கின்ற பாராட்டுகளை நான் பணிவோடு ஏற்றுக்கொள்கிறேன். அது நான் இன்னும் கவனமா, கூடுதலாக பணியாற்ற ஊக்கம் தருது. கடந்த ஆண்டு இந்தியாவின் நம்பர் ஒன் முதலமைச்சராக இந்தியா டுடே இதழால் தேர்ந்தெடுக்கப்பட்டேன். அதைவிட தமிழ்நாடு நம்பர் ஒன் ஆவது தான் எனக்கு பெருமை என்று அப்ப நான் சொன்னேன்.
அதை மனசுல வச்சு பணியாற்றினோம். அதற்கு பலனாக கடந்த வாரத்தில் தமிழ்நாடும் இந்தியாவிலேயே நம்பர் ஒன் மாநிலமாக தகுதி பெற்றுள்ளது. 12 குறியீடுகளில் 9 ல தமிழ்நாடு முன்னிலையில் வந்துள்ளதாக அறிவிச்சிருக்காங்க. இது திராவிட முன்னேற்றக் கழக அரசு சேர்த்தவர்களின் உழைப்புக்கு கிடைத்த சான்று. ஒவ்வொரு நாளும் திட்டமிட்டு உழைத்ததால் தான், இந்த வெற்றி சாத்தியமாச்சு. நினைச்சு பார்க்கிறேன்.
நித்தமும் மக்களுக்காக நான் ஓய்வு இல்லாமல் உழைச்சிட்டு இருக்கேன். கடந்த ஓராண்டு காலத்தில மட்டும் 640க்கும் அதிகமான நிகழ்ச்சில நான் பங்கு எடுத்து இருக்கேன். இதுல 550 க்கு அதிகமான நிகழ்ச்சிகள் அரசு நிகழ்ச்சிகள். கழக நிகழ்ச்சிகள் 90 க்கும் மேல.
மொத்தமா பாத்தா தமிழ்நாட்டின் 8,500 கிலோ மீட்டருக்கு அதிகமாக சுத்தி வந்திருக்கேன். மக்களுக்கு நேரடியாக வழங்கப்பட்ட உதவிகள் மூலமாக ஒரு கோடியே மூன்று லட்சத்து 74 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பயனடைந்து இருக்காங்க. தமிழ்நாடு முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டதன் மூலமாக பயனடைஞ்சவங்க இவங்க என தெரிவித்தார்.