தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரையும் மாற்ற வேண்டும் என்று முக.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
தமிழக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் மாற்றப்பட்டது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. இந்த நிலையில் தான் திமுக தலைவர் மு க ஸ்டாலின் இது குறித்து பல்வேறு கருத்துக்களை வலியுறுத்தியுள்ளார். அதில்,சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷை மாற்றியது போல் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரையும் மாற்றி இருக்க வேண்டும்.
பல குற்றச்சாட்டுக்கு ஆளாகி இருப்பதால் விஜயபாஸ்கரை மாற்ற நடுநிலையாளர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். சுகாதாரத் துறையை முதல்வர் தன் வசம் எடுத்துக் கொள்ள வேண்டும் என்ற கருத்தை அலட்சியப்படுத்தக்கூடாது.
அதிமுக அரசின் அதிகார விளையாட்டுக்கு அப்பாவிகள் பலிகடா? பேரிடர் பணிகளில் அடிப்படை ஒருங்கிணைப்பு இல்லாமல் போனதே குளறுபடி குழப்பத்திற்கு காரணம் என்றும் திமுக தலைவர் முக.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.