திமுக தலைவர் ஸ்டாலின் ஒரு லாலிபாப் பேபி என்று அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம் செய்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடக்க இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தங்கள் தேர்தல் பிரசாரத்தை தீவிரமாக தொடங்கியுள்ளனர். இதனால் தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. இதையடுத்து ஆனாலும் கட்சியினரும், எதிர்க்கட்சியினரும் ஒருவரையொருவர் குற்றம்சாட்டி விமர்சனம் செய்து கொண்டு வருகின்றனர். அதிமுகவினர் விமர்சனத்திற்கு திமுக பதிலடி கொடுத்து வருகின்றனர். திமுகவினர் விமர்சனத்திற்கு அதிமுகவினர் பதிலடி கொடுத்து வருகின்றனர். இந்நிலையில் சென்னையில் புதிதாக கட்டப்பட்டுள்ள மேசைப்பந்தாட்டம் உள்விளையாட்டு அரங்கத்தை அமைச்சர் ஜெயக்குமார் மற்றும் செங்கோட்டையன் ஆகியோர் திறந்து வைத்துள்ளனர்.
அப்போது பேசிய ஜெயக்குமார், “மத்திய அரசுடன் அதிமுக அரசு இணைந்து மக்களுக்கான நலத்திட்டங்களை பெற்று தருகிறது. இது பொறுக்காமல் எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றனர். மேலும் நிதி நிலை அறிக்கையை எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் “லாலிபாப்” என ஒப்பிட்டு விமர்சிப்பது, அவருக்கு அரசியலில் முதிர்ச்சி இல்லாதததை காட்டுகிறது. அரசியலில் லாலிபாப் பேபி ஸ்டாலின்தான். மத்திய பாஜக ஆட்சியில் இருந்தபோது பதவி பெற்று முழுமையாக அனுபவித்தது திமுக தான். ஊழல் பெருச்சாளிகளாக இருந்த திமுக தற்போது புது அவதாரத்தோடு தமிழகத்தில் நுழைய முயற்சிப்பது மக்களுக்கு நன்றாக தெரியும்” என்று விமர்சனம் செய்துள்ளார்.