திமுக சார்பில் அரசின் மீது வைக்கப்பட்ட விமர்சனங்களுக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பதிலடி கொடுத்துள்ளார்.
இன்று சேலத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசும் போது, திமுக தலைவர் என்ன செஞ்சுட்டு இருக்காரு. தினமும் ஒரு அறிக்கை விட்டுக் கொண்டிருக்கின்றார்கள். அரசியல் செய்வதற்காக அறிக்கை விடுகிறார். நோய் சம்பந்தமாக என்ன அறிக்கை விட்டார். நோய் பரவலை எப்படி தடுக்க முடியும் ? நோய் வந்தால் எப்படி குணப்படுத்த முடியும் ? என்று ஏதாவது சொல்லியிருக்கிறாரா ? தினம்தோறும் அரசை பற்றி குறை சொல்வது, முதலமைச்சரை பற்றி குறை சொல்வதை வாடிக்கையாக வைத்துள்ளார்.
வீட்டிற்குள்ளேயே, ரூம்குள்ள இருக்கின்றார். ஏதோ ஒரு நாள், இரண்டு நாள் பொது மக்களை சந்தித்து நிவாரணங்கள் கொடுத்துள்ளார். நாங்கள் அப்படி கிடையாது. நான் உட்பட துணை முதல்வர், அமைச்சர்கள், ,நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் நேரடியாக சென்று இயன்றவரை பாதிக்கப்பட்ட மக்களுக்கு, நோய் பரவாமல் தடுப்பதற்கு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.