திமுகவின் மறைந்த தலைவர் இனமான பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு விழாவில் பேசிய தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், என்னை பொறுத்தவரையில் அரசியல் வரலாற்றிலே 2 பேரும் ஆளுமைகள் இத்தகைய நட்பு புரிதலோடு இருந்திருக்கிறார்கள் என்று சொன்னால் அது கலைஞரும், பேராசிரியராக தான் இருக்க முடியும். எதையும் பேராசிரியர் இடத்திலும் சொல்லிவிட்டு செய் வேண்டுமென்று நினைப்பார் நம்முடைய தலைவர் கலைஞர் அவர்கள்.
கலைஞர் செஞ்சா சரியாத்தான் இருக்கும் அப்படி நினைப்பார் பேராசிரியர். இத்தகைய நண்பர்களை அரசியல் பார்ப்பது என்பது மிக மிக மிக அரிது. இந்த இயக்கத்தை தலைவர் கலைஞர் அவர்கள் பிறகு வழிநடத்த தகுதியானவன் ஸ்டாலின் தான் என்பதை முதலில் சொன்னவர் என்னுடைய பெரியப்பா பேராசிரியர் அவர்கள் தான். அதாவது கலைஞருக்கு முன்னாடியே சொன்னவரும் என்னுடைய பெரியப்பா தான்.
என்னுடைய அரசியல் வாழ்க்கையை அவரிடத்தில் இருந்து தான் ஆரம்பித்தது. 13 வயசுல பள்ளி சிறுவனாக, பள்ளி மாணவனாக இருந்தப்போது கோபாலபுரம் பகுதியில் இளைஞர் திமுக என்று ஒரு அமைப்பை நான் தொடங்கி, 20, 25 சிறுவர்களுடன் சேர்ந்து அந்த அமைப்பை நடத்தி, அவர்களுக்கு என்று ஒரு அலுவலகத்தை உருவாக்க வேண்டும் என்று…. கோபாலபுரத்தினுடைய தலைவருடைய தெரு இருக்கு பாருங்க…
அதோட மூளை பகுதியில 5, 6 கடைகள் இருக்கும் அதுல ஒரு கடை பார்பர் ஷாப். முடிதிருத்து நிலையம். அந்த இடத்தில் தான் என்னுடைய அலுவலகத்தை ஆரம்பிச்சேன். அதை திறந்து வைக்க வேண்டும் என்று தலைவர் கலைஞர் இடத்தில், பேராசிரியர் இடத்திலே சொன்ன போது, 2 பேரும் கிளம்புனாங்க, நடந்தே வந்தாங்க.
கோபாலபுரம் அந்த தெருவில் நடந்தே வந்தனர். கத்திரிக்கோல் எடுத்து தலைவருக்கு கிட்ட கொடுக்கிறேன். தலைவர் உடனே நான் திறக்க மாட்டேன். அவரிடத்தில் கொடுத்து திறக்க சொல் என்று பேராசிரியர் கையில் கொடுத்தார். ஆக முதன் முதலில் என்னுடைய அலுவலகத்தை திறந்து வைத்தது என்னுடைய பெரியப்பா பேராசிரியர் அவர்கள் தான் என பெருமிதம் கொண்டார்.