திமுக தலைவர் முக.ஸ்டாலின் எதுவுமே செய்யவில்லை என்று அமைச்சர் ஆர்.பி உதயகுமார் பட்டியலிட்டு அடுக்கியுள்ளார்.
நேற்று செய்தியாளர்களிடம் பேசிய வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி உதயகுமார் பேசும் போது, மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர், அவர் கொடுக்கின்ற அறிவுரைகள், ஆலோசனைகள் எல்லாம் இன்று அவர் ஏற்றுக்கொள்ள மறுக்கிறார் என்கின்ற ஒரு அபாண்டமான பழியை சுமத்தி இருக்கின்றார். மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் உலகளாவிய கருத்துக்களை அனுபவங்களை சேகரித்து, மாண்புமிகு பாரத பிரதமர் அவர்களுக்கும் சில வழிகாட்டல்கள், நம்முடைய வல்லுனர்கள் குழு கொடுக்கின்ற வழிகாட்டல்கள், மாவட்ட ஆட்சியர்கள் மாவட்ட அளவில் நடைபெற்ற களநிலவரங்களை கொடுக்கின்ற கருத்துக்கள், தலைமைச் செயலாளர் தலைமையில் டாஸ்க் போர்ஸ் மேற்கொள்ளும் நடவடிக்கைகள், மருத்துவ குழு நடவடிக்கைகள், பொருளாதார வல்லுனர்கள் கொடுக்கின்ற கருத்துக்களையெல்லாம் உள்ளடக்கி தான் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் பல்வேறு சீரிய நடவடிக்கைகளை எடுத்து வருகின்றார்.
வாடகைக்கு ஆள் பிடிப்பு:
இன்றைக்கு ஸ்டாலினுக்கு ஆலோசனை சொல்வதற்கே அவர் வாடகைக்கு ஆள் பிடித்திருப்பதை, அவரை வெளிப்படையாக ஒப்புக் கொண்டுள்ளார். அவர் ஆலோசனையை கேட்டு நாங்கள் செயல்படவில்லை என்கின்ற ஒரு குற்றச்சாட்டை சொல்கிறான். அம்மாவின் அரசு ஒரு நிமிடம் கூட அம்மாவுடைய காலத்திற்கு பின்பு இங்கு இருக்கக் கூடாது என்பதில் எப்படிபட்ட நடவடிக்கைகளில் ஈடுபட்டார் என்பது தமிழ்நாட்டு மக்களுக்கு நன்றாக தெரியும். கொரோனா தொற்றை ஒழித்து, மக்கள் இடத்திலேயே நாங்கள் நல்ல பேர் வாங்கி விட்டாள், இந்த மக்களுடைய அசைக்க முடியாத நம்பிக்கைக்குரியவராக மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் இன்றைக்கு இருப்பதை போல என்றைக்கும் இருந்து விடுவார் என்ற அச்சத்தின் காரணமாக தான் ஒரு நாளைக்கு வீட்டில் உட்கார்ந்து கொண்டு பத்து அறிக்கைகளை அவர் வெளியிட்டுக் கொண்டே இருக்கின்றார். அறிக்கைகளை அவர் விடுவதில் அவர் அறிக்கை மன்னனாக இருக்கிறார்.
முதல்வர் செல்வாக்கு:
அவரே வெளிப்படையாக எங்களுக்கு அறிவுரை கூறுவதற்கும், ஆலோசனை கூறுவதற்கும் பிரசாந்த் கிஷோர் என்ற ஐபேக் நிறுவனத்தை நாங்கள் நியமித்திருக்கிறோம் என்று அவர் வெளிப்படையாக ஒப்புக் கொண்டுள்ளார். அப்படிப்பட்டவர் அம்மாவுடைய அரசு இந்தத் தாய்த் தமிழ் நாட்டிலே ஒரு நிமிடம் கூட நீடித்து இருக்க கூடாது என்று நினைக்கின்ற அவர் எப்படி அம்மாவின் அரசுக்கு நல்ல பெயர் வருகின்ற வகையிலே, செல்வாக்கு வருகின்ற வகையிலே, நம்பிக்கை வரக்கூடிய வகையிலே ஆலோசனை கூறுவார்.மக்கள் மீது அக்கறையோடு அவர் இதுவரை எந்த ஆலோசனையை கூறி இருக்கின்றார்.
எதிர்க்கட்சி ஆலோசனை இல்லை:
2 கோடியே ஒரு லட்சம் குடும்பங்களுக்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் முதல் ஊரடங்கு அறிவிப்பதற்கு முன்னதாகவே விலையில்லாத ரேஷன் பொருட்களை வழங்கி ஏப்ரல் மாதம், மே மாதம், ஜூன் மாதம் என மூன்று மாதங்களுக்கு விளையெல்லாத ரேஷன் பொருட்களை 2 கோடியே ஒரு லட்சம் குடும்பங்களுக்கு ( ஒரு குடும்பத்தில் 4 பேர் என்று சொன்னால் 8 கோடி பேர் ) நிவாரணங்களை அவர்களுடைய வீடுகளில் முதல்வர் சேர்த்திருக்கிறார். இது மாண்புமிகு எதிர்க்கட்சி தலைவர் கொடுத்த ஆலோசனை அல்ல. முதல் ஊரடங்கிற்கு முன்பாகவே இந்த நடவடிக்கையை மேற்கொண்டார். அதேபோல 35 லட்சம் அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு முதல்முறையாக ஆயிரம் ரூபாயும், இரண்டாவது முறை ஆயிரமும், அவர்களுக்கான அரிசி, பருப்பு, எண்ணெய் போன்றவைகள் மாண்புமிகு முதலமைச்சர் அறிவிப்புகள் கிணங்க சேர்க்கப்பட்டது.
அறிக்கை விடும் ஸ்டாலின்:
அம்மா உணவகத்தின் மூலமாக 7 லட்சம் குடும்பங்களுக்கு தினம்தோறும் விலையில்லாமல் உணவு வழங்கப்பட்டது. கமுயூனிட்டி கிச்சன் என்று உருவாக்கி மாவட்டம்தோறும் பேரிடர் மேலாண்மை நிதியில் இருந்து உணவு வழங்கப்பட்டது. இவைகள் எல்லாம் எதிர்க்கட்சி தலைவர் கொடுத்த ஆலோசனைகள் அல்ல… அவர் கொடுக்கின்ற ஆலோசனை எல்லாம்… அவர் கொடுக்கின்ற அறிவுரைகள் எல்லாம்…. அறிக்கைகள் எல்லாம்… மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் மக்கள் நலன் சார்ந்து பல்வேறு கருத்துக்களை உள்ளடக்கி அந்த அறிவிப்பு கொடுப்பதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பாகவோ அல்லது ஒரு நாளுக்கு முன்பாகவே அந்த செய்தியை யூகித்தோ அல்லது அவர் திறமையாலோ அல்லது அந்த செய்தியை பெற்றோ அவர் ஒரு அறிக்கை வெளியிடுவார் .
அறிஞ்சர்கள் அறிவுரை:
முதல்வர் அவர்கள் பாரதப் பிரதமர், டாஸ்க் போர்ஸ் மற்றும் பல்வேறு தகவல்களை பெற்று தான் தீர ஆராய்ந்து, ஏனென்றால் உலகளாவிய ஒரு வழிகாட்டல் இந்த நோய் தடுப்பு நடவடிக்கையாக எந்த நாட்டுக்கும் இதுவரை வழங்கவில்லை. ஆகவே ஒவ்வொரு நாடும், ஒவ்வொரு மாநிலமும் தங்களுடைய அந்த மாவட்ட ஆட்சியர்கள், மாவட்ட ஆட்சியர்களோடு உயர் அலுவலர்கள் மற்றும் கள நிலவரங்களை உள்வாங்கிக் கொண்டு மருத்துவர்கள், பொருளாதார வல்லுனர்கள், அரசியல் அறிஞர்கள் என பல்வேறு அறிவுரைகளை பெற்று தான் முதலமைச்சர் நடவடிக்கை எடுத்து வருகிறார் என்று அமைச்சர் ஆர்.பி உதயகுமார் தெரிவித்தார்.