கொரோனா வைரஸை விட கொடூர வைரஸ் முக.ஸ்டாலின் என்று சுதீஷ் விமர்சித்தார்.
உலக மகளிர் தினத்தையொட்டி தேமுதிக சார்பில் மதுரை திருப்பரங்குன்றம் பதினாறுகால் மண்டபம் பகுதியில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் தேதிமுகவின் பொதுச் செயலாளர் விஜயகாந்த், பிரேமலதா, துணைச் செயலாளர் சுதீஷ் , விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன் மற்றும் ஏராளமான தேதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் பங்கேற்றனர். இதில் தேமுதிகவின் துணை செயலாளர் சுதீஷ் பேசுகையில்,
கேப்டன் ரசிகர் மன்றம் இருக்கும் போதே மகளிரணி வைக்கப்பட்டது. 40 வருடமாக மகளிருக்கான அணியை வைத்ததோடு , கட்சி ஆரபித்த உடன் முதல் முதலாக உலக மகளிர் தினம் வேலூரில் கொண்டாடப்பட்டது. திமுக , அதிமுக , காங்கிரஸ் , பிஜேபி என எந்த கட்சியும் மகளிர்தினம் கொண்டாடியது கிடையாது. மகளிர் தினம் கொண்டாடிய முதல் கட்சி தேசிய முற்போக்கு திராவிட கழகம். இதுவே பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கட்சி என்று பெருமிதம் தெரிவித்தார்.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் 100க்கும் அதிகமான நாடுகளுக்கு மேல் பரவியுள்ளது. தமிழ்நாட்டில் அதை விட கொடிய வைரஸ் இருக்கிறது.திமுக தலைவர் ஸ்டாலின் தான் கொரோனாவை விட கொடூர வைரஸ். தமிழ்நாட்டில் இந்து , கிறிஸ்து, முஸ்லிம் என மாமன் மச்சானாக வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். நமக்குள் பிரிவினையை ஸ்டாலின் உருவாக்குகிறார். அதனால் தான் கொரோனாவை வைரசை விட மோசமான வைரஸ் மு க ஸ்டாலின் என்று தெரிவித்தேன்.அவருக்கு தேவை ஓட்டு, மக்களைப் பற்றி கவலை கிடையாது.
நடந்து முடிந்த தேர்தலில் பொய் சொல்வதில் மன்னர் ஸ்டாலின். ஒவ்வொரு கிராமமாக சென்று நாங்கள் வெற்றி பெற்று வட்டியில்லா கடன் கொடுத்து விடுவோம் என்று சொன்னார். இதை நம்பி மக்கள் ஓட்டு போட்டார்கள் . அவர் சொன்ன பொய்யால் தான் தமிழகத்தில் உள்ள அனைத்து மகளிரும் கடனாளியாக உள்ளார்கள் என்று சுதீஷ் தெரிவித்தார்.