Categories
அரசியல் மாநில செய்திகள்

”ஸ்டாலின் போவாரு..ஓவரா சீன் காட்டுவாரு” முதல்வர் விமர்சனம் …!!

எதிர்க்கட்சி தலைவர் முக. ஸ்டாலின் போவாரு , ஓவரா சீன் காட்டுவாரு என்று தமிழக முதல்வர் விமர்சனம் செய்துள்ளார்.

நீலகிரியில் ஏற்பட்டுள்ள வெள்ள சேதாரங்களை ஆய்வு செய்து , நிவாரண பணிகளை மேற்கொண்ட திமுக தலைவர் முக.ஸ்டாலின் அரசு மழை வெள்ளம் குறித்து எந்த முன்னெச்சரிக்கையும் எடுக்கவில்லை , நிவாரண பணிகள் மேற்கொள்ளவில்லை என்று குற்றம் சாட்டினார். ஸ்டாலினின் இந்த குற்றசாட்டை தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மறுத்த நிலையில் தமிழக முதல்வரும் தற்போது பதிலளித்துள்ளார்.

Image result for எடப்பாடி பேட்டி

கோவையில் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறுகையில் , எங்களைப் பொறுத்தவரை நிவாரணப் பணிகள் என்பது அரசின் மூலமாக துரிதமாக செய்யப்பட்டு வருகின்றது.கஜா புயல் வந்த போது எங்களுடைய அமைச்சர் அங்கேயே தங்கியிருந்து நிவாரணப் பணிகளை மேற்கொண்டார்கள்.  துணை முதலமைச்சர்களும் நானும் அங்கே சென்று மக்களை சந்தித்து ஆறுதல் சொல்லி பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான நிவாரணங்களை செய்துள்ளோம்.

Image result for எடப்பாடி பேட்டி

அது மட்டுமல்ல அங்கு துண்டிக்கப்பட்ட மின்சாரத்தை முழுவதும் இணைத்து கொடுக்கின்ற அளவிற்கு மின்துறை அமைச்சர் அங்கேயே தங்கியிருந்து ஊழியர்கள் வேகமாக துரிதமாக செயல்பட்ட வைத்து மக்களுக்கு தடையில்லா மின்சாரத்தை செய்து கொடுத்தோம்.  ஆனால் எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் அப்படி இல்லை. அவரு ஓவரா சீன் காட்டுவாரு.ஊடகங்களுக்கு பேட்டி கொடுப்பார். எங்களுடைய நிலை அப்படியல்ல நாங்கள் பார்வையிட்டு வந்த பிறகு என்னென்ன பாதிப்பு இருக்கிறதோ அந்த பாதிப்பை சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

Categories

Tech |