Categories
Uncategorized

“திமுகவுக்கு ஸ்டாலின் தலைவர் அல்ல” இவர் தான் தலைவர் – ஜெயக்குமார் கிண்டல்…!!

திமுகவின் தலைவர் ஸ்டாலின் கிடையாது பிரசாந்த் கிஷோர் தான் என்று அமைச்சர் ஜெயக்குமார் கிண்டல் செய்துள்ளார்.

2021 ஆம் வருடம் சட்டமன்ற தேர்தல் நடக்க இருக்கும் நிலையில் அனைத்து கட்சிகளும் தங்களுடைய பிரச்சாரத்தை தொடங்கியுள்ளனர். இந்நிலையில் சென்னை ராயப்பேட்டை ஒய்எம்சிஏ மைதானத்தில் அதிமுகவினர் தங்களுடைய தேர்தல் பிரச்சார பொதுக் கூட்டத்தை இன்று காலை தொடங்கியுள்ளனர். இதில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் உட்பட பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட அதிமுக உறுப்பினர்கள் பங்கேற்றுள்ளனர். இதில் அமைச்சர் ஜெயக்குமார் கலந்து கொண்டு பேசியுள்ளார். அதில், “இன்று சனிப்பெயர்ச்சி நாள்.

அதிமுகவுக்கு இனி நல்ல காலம் தான் ஆனால் திமுகவுக்கு இன்றிலிருந்து சனி பிடிக்கிறது. இமாலய ஊழல் செய்தது திமுக தான். டெல்லி போனாலே தமிழனுக்கு அவ்வளவு மரியாதை கிடைக்கும். ஆனால் திமுகவினரின் 2ஜி ஊழலால் எல்லோரும் தலைகுனிய வேண்டிய நிலை வந்தது. இந்த நிலையை எல்லாம் கொடுத்தது திமுக தான். மேலும் திமுகவின் தலைவர் மு க ஸ்டாலின் கிடையாது. பிரசாந்த் கிஷோர் தான். என்ன செய்தாலும் திமுகவுக்கு தோல்வி மட்டுமே கிடைக்கும்” என்று விமர்சனமும், கிண்டலும் கலந்து பேசியுள்ளார்.

Categories

Tech |