Categories
அரசியல் மாநில செய்திகள்

பிரதமருக்கு கடிதம் எழுதிய 49 பேர் மீது தேசத்துரோக வழக்கு… “எப்படி தேசத் துரோகம் ஆகும்?… ஸ்டாலின் கண்டனம்.!!

இந்திய ஜனநாயகத்தையும் அரசியல் சட்டத்தின் அடிப்படைக் கூறுகளையும் காப்பாற்றிட 49 பேருக்கு எதிரான தேசத் துரோக வழக்கை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் முக ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார். 

இது தொடர்பாக திமுக தலைவர் முக ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில்,” சிறுபான்மையினருக்கு எதிராக கும்பல் வன்முறையை தடுத்து நிறுத்துங்கள்” என்றும், “மத நல்லிணக்கத்தையும் சகிப்புத்தன்மையையும் பாதுகாப்பதற்கு நடவடிக்கை எடுங்கள்” என்றும்  பிரதமருக்கு கடிதம் எழுதிய புகழ் வாய்ந்த பல்துறைப் பிரமுகர்கள் 49 பேர் மீது தேசத்துரோக வழக்குப் பதிவு செய்திருப்பதற்கு திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

Image result for முக ஸ்டாலின்

வரலாற்று ஆய்வாளர் ராமச்சந்திர குஹா, இயக்குனர் மணிரத்னம், நடிகை ரேவதி இயக்குனர் அடூர் கோபாலகிருஷ்ணன், நடிகர் சௌமித்ரா சாட்டர்ஜி போன்ற கலை அறிவியல் சான்றோர்களை  எல்லாம் “தேசத் துரோகிகள்” என்று முத்திரை குத்த நினைப்பதை எவராலும் ஏற்றுக் கொள்ள இயலாது. சமூக அக்கரை உள்ள அத்தகைய முன்னோடிகளை தேசத்துரோகிகள் என்று சொல்வதைவிட பேரபாயம் வேறு எதுவும் இருக்க முடியாது. இது மிகவும் வெறுத்து ஒதுக்க வேண்டிய முன்னுதாரணமாகும்
அரசியல் சட்டத்தின் அடிப்படை நோக்கங்களாக இருக்கும் மத நல்லிணக்கத்தையும் சகிப்புத்தன்மையையும் நிலைநாட்டுங்கள் என்று கூறுவது எப்படி தேசத் துரோகம் ஆகும்?  இது எத்தகைய கொடுமை?
Image result for முக ஸ்டாலின்
சட்டத்தின் ஆட்சிக்கு பாஜக தலைமையிலான மத்திய அரசில் இப்படி ஒரு சோதனையா? என்று கேள்வி எழுப்பியும் அதே நேரத்தில், மத்தியிலுள்ள பிரதமர் மோடி தலைமையிலான அரசு கருத்து சுதந்திரத்திற்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதை எந்த விதத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாது
நாம் ஜனநாயக நாட்டில்தான் வாழ்கிறோமா என்ற அய்யப்பாட்டையும், அச்சத்தையும் ஒவ்வொரு குடிமகனின் உள்ளத்திலும் ஏற்படுத்தி பாஜக அரசின் எதிர்மறை செயல்பாடுகள் பற்றி பேச விடாமல் வாய்ப்பூட்டு போடும் இந்த முயற்சி கண்டனத்திற்குரியது.
Image result for முக ஸ்டாலின் மோடி
சர்வாதிகாரத்தை கையில் எடுத்தவர்கள் அடக்குமுறையை கட்டவிழ்த்து விட்டவர்கள் கருத்து சுதந்திரத்துக்கு கைவிலங்கு போட்டவர்கள் எல்லாம் ஜனநாயகத்தின் முன்பு இதுவரை படுதோல்வி அடைந்தது தான் வரலாறு என்பதை மத்தியில் இருக்கும் பாஜக அரசு உணர வேண்டும்.

“ஆட்சி அமைக்க கிடைத்திருக்கும் மெஜாரிட்டி மக்கள் மனமுவந்து அளித்தது அதை திருப்பி எடுத்துக் கொள்ளும் மாட்சிமை மிக்க அதிகாரம் மக்களிடமே இருக்கிறது” இதுதான் ஜனநாயகம் கட்டமைத்து வைத்துக் கொண்டுள்ள தற்காப்பு அரண்! அதை மத்தியிலுள்ள பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் உணர்ந்து 49 பேருக்கு எதிரான தேசத்துரோக வழக்கினை உடனடியாகத் திரும்பப் பெறுவதற்கான நடவடிக்கைகளை எடுத்து இந்திய ஜனநாயகத்தையும் அரசியல் சட்டத்தின் அடிப்படை கூறுகளையும் காப்பாற்றிட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

Image

 

Categories

Tech |